குடியரசுத் தலைவர் செயலகம்

'தேசிய இ-விதான் செயலி'யைத் தொடங்கி வைத்த குடியரசுத் தலைவர் குஜராத் சட்டமன்றத்தில் உரையாற்றினார்

Posted On: 13 SEP 2023 1:22PM by PIB Chennai

காந்திநகரில் இன்று (செப்டம்பர் 13, 2023) 'தேசிய இ-விதான் செயலி'யைத் தொடங்கி வைத்த குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முகுஜராத் சட்டமன்றத்தில் உரையாற்றினார்.

1960 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்துகுஜராத் சட்டமன்றம் எப்போதும் சமூகத்தின் நலனுக்காக செயல்பட்டு வருகிறது என்று விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் கூறினார். அவ்வப்போது பல பாராட்டத்தக்க நடவடிக்கைகளை இம்மன்றம் எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். இன்று இ-பேரவையைத் தொடங்கி வைப்பது இந்த அவையை டிஜிட்டல் அவையாக மாற்றும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும் என்று அவர் மேலும் கூறினார். தேசிய இ-விதான் செயலி மூலம் இந்த அவையின் உறுப்பினர்கள் நாடாளுமன்றம் மற்றும் நாட்டின் பிற சட்டமன்றங்களின் சிறந்த நடைமுறைகளைக் கற்றுக்கொள்ளவும் பின்பற்றவும் முடியும் என்று அவர் தெரிவித்தார். "ஒரே நாடு ஒரே பயன்பாடு" என்ற இலக்கால் ஈர்க்கப்பட்ட இந்த முயற்சிகுஜராத் சட்டமன்றத்தின் செயல்பாட்டில் அதிக வேகத்தையும் வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வரும் என்றும்அவையின் முழு செயல்முறையும் காகிதமற்றதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பல அளவுகோல்களில் நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக குஜராத் விளங்குகிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இது ஒரு முன்னணி உற்பத்தி மையமாகவும்மிகப்பெரிய பால் உற்பத்தி மாநிலமாகவும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஸ்டார்ட் அப் சூழல்மேற்கூரை சூரிய மின்சக்தி உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் முன்னணி மாநிலங்களில் இதுவும் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

எந்தவொரு மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்திலும் மனிதவளம் முக்கியப்  பங்கு வகிக்கிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். மனித வள மேம்பாட்டிற்கு நல்ல சுகாதார அமைப்புதரமான கல்விமின்சாரம்தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளைப்  பொதுமக்களுக்கு வழங்குவது முக்கியம் என்று அவர் கூறினார். இந்த விஷயத்தில் குஜராத் அரசு முழு கவனம் செலுத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசின் முயற்சியால் பெண் கல்விஆசிரியர்-மாணவர் விகிதம்சேர்க்கை விகிதம்தக்கவைப்பு விகிதம் ஆகியவற்றில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மகப்பேறுகால  இறப்பு விகிதம் மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைக்கும் மூன்றடுக்கு சுகாதார அமைப்பு மூலம் கிராமப்புறங்களில் வழங்கப்படும் சிறந்த மருத்துவ சேவைகளை அவர் பாராட்டினார். கடந்த இரண்டு தசாப்தங்களில் குஜராத்தில் மின்சார சீர்திருத்தம்நீர் சேகரிப்பு மற்றும் நீர் விநியோகத்தில் செய்யப்பட்ட குறிப்பிடத்தக்கப் பணிகளை அவர் பாராட்டினார். விலங்குகள் நலனுக்கான மாநில அரசின் முன்முயற்சிகளைக் கண்டு அவர் மகிழ்ச்சியடைந்தார்.

அவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்துப் பேசிய குடியரசுத் தலைவர்அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்பாதுகாப்பு அல்லது விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சிறப்பாக செயல்படும்போதுஅரசியலில் அவர்களின் பிரதிநிதித்துவமும் அதிகரிக்க வேண்டும் என்றார். நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்குச் சென்றபோதுவாழ்க்கையில் முன்னேறவும்நாட்டிற்கும் சமூகத்திற்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற பெண்களின் விருப்பத்தை கவனித்ததாக அவர் கூறினார். பெண்களுக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்பட்டால்அவர்கள் ஆண்களுடன் தோளோடு தோள் நின்று தேசத்தைக் கட்டமைப்பதில் பங்களிக்க முடியும் என்று அவர் கூறினார். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மக்கள் தொகையில் பாதியாக  இருப்போரின் பங்கேற்பு மிகவும் முக்கியமானது என்பதை அவர் எடுத்துரைத்தார்.

ஜி20 உச்சிமாநாட்டின் போது உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியை உருவாக்கியது குறித்துப் பேசிய   குடியரசுத் தலைவர்சர்வதேச சூரியசக்தி கூட்டணிக்குப் பிறகுசுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி தற்சார்புக்காக இந்தியா தலைமையின் கீழ் எடுக்கப்பட்ட மற்றொரு முக்கியமான நடவடிக்கை இது என்று கூறினார். புதுமையான மற்றும் பாரம்பரியமற்ற எரிசக்தி ஆதாரங்களை ஊக்குவிக்கும் குஜராத் போன்ற மாநிலத்திற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்று அவர் மேலும் கூறினார்.

மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்குத் தொழில்நுட்பம் ஒரு முக்கியமான வழியாகும் என்றும்சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுடன் தொடர்பில் இருக்க இ-விதான் மேலும் உதவும் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார். நாடாளுமன்ற மாண்பையும் கண்ணியத்தையும் பராமரிக்கும் அதே வேளையில்இந்த அவையில் மக்கள் நலன் குறித்து விவாதிப்பதற்கு ஒரு புதிய தரத்தை அவர்கள் ஏற்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார். குஜராத்தை மிகவும் வளமான மாநிலமாக மாற்றுவது மட்டுமின்றி, 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை முழுமையாக வளர்ந்த நாடாக மாற்றுவதற்கும் அவர்களின் முயற்சிகள் முக்கியமானதாக இருக்கும் என்று அவர் கூறினார்.

********

ANU/AP/SMB/GK



(Release ID: 1956940) Visitor Counter : 136