விவசாயத்துறை அமைச்சகம்
நெல் விதைப்பு பரப்பு 400 லட்சம் ஹெக்டேரை தாண்டியது
182 லட்சம் ஹெக்டேரில் விதைக்கப்பட்ட சிறுதானியங்கள்
கரும்பு பரப்பு 59.91 லட்சம் ஹெக்டேராக இருந்தது.
காரீப் பயிர் விதைப்பு 1088 லட்சம் ஹெக்டேரை தாண்டியது
प्रविष्टि तिथि:
11 SEP 2023 1:23PM by PIB Chennai
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை 2023 செப்டம்பர் 8ஆம் தேதிநிலவரப்படி காரீப் பயிர்களின் பரப்பளவு விவரங்களை வெளியிட்டுள்ளது.
நெற்பயிர் 403.41 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 392.81 லட்சம் பரப்பில் நெற்பயிர் பயிரிடப்பட்டது.
பயறு வகைகள் 119.91 லட்சம் ஹெக்டேரிலும், சிறுதானியங்கள் 182.21 லட்சம் ஹெக்டேரிலும், எண்ணெய் வித்துக்கள் 191.49 ஹெக்டேரிலும், கரும்பு 59.91 லட்சம் ஹெக்டேரிலும் பயிரிடப்பட்டுள்ளன.
***
(रिलीज़ आईडी: 1956320)
आगंतुक पटल : 230