பிரதமர் அலுவலகம்

கனடா பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு

Posted On: 10 SEP 2023 7:05PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று (10-09-2023) நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போது கனடா பிரதமர் திரு ஜஸ்டின் ட்ரூடோ-வை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

 

இந்தியாவின் தலைமைத்துவத்தில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டின் வெற்றிக்கு கனடா பிரதமர் திரு ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள், சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளில் இந்தியா-கனடா ஒத்துழைப்பு மிக வலுவாக உள்ளது  என்று பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். கனடாவில் அங்குள்ள தீவிரவாத சக்திகள், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவது குறித்து வலுவான கவலையை கனடா பிரதமரிடம் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். அந்த சக்திகள் பிரிவினைவாதத்தை ஊக்குவித்து, இந்திய அதிகாரிகளுக்கும் அங்குள்ள இந்திய தூதரக அலுவலகங்களுக்கும் எதிராக வன்முறையைத் தூண்டுவதாக பிரதமர் கூறினார். கனடாவில் உள்ள இந்திய சமூகத்துக்கும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கும் அந்த சக்திகள் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். திட்டமிட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் போன்ற குற்றங்களுடன் தொடர்புடைய இந்த சக்திகள் கனடாவிற்குமே ஒரு கவலையாகவும் அச்சுறுத்தலாகவும் இருக்கும் என பிரதமர் குறிப்பிட்டார். இதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இரு நாடுகளும் ஒத்துழைத்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

 

இந்தியா-கனடா நட்புறவின் முன்னேற்றத்திற்கு பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட உறவு அவசியம் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

***

ANU/SM/PLM/DL



(Release ID: 1956110) Visitor Counter : 313