பாதுகாப்பு அமைச்சகம்
ஜி 20 திங்க் இந்தியக் கடற்படை விநாடி வினா - தொடுவானத்திற்கு அப்பால் பயணம்
Posted On:
09 SEP 2023 7:45PM by PIB Chennai
ஜி 20 செயலகம், இந்தியக் கடற்படை மற்றும் கடற்படை நலன் மற்றும் நல்வாழ்வு சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள வெகுசிறப்பான ஜி 20 திங்க் நிகழ்வு, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஊக்கமளிக்கும் அறிவுசார் அனுபவத்தை வழங்க உறுதியளிக்கிறது. தேசிய அளவிலான விநாடி வினா போட்டியில் 11,700-க்கும் அதிகமான பள்ளிகளைச் சேர்ந்த 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த அறிவார்ந்த பயணத்தைத் தொடங்க, முதலாவது செப்டம்பர் 10, 2023 அன்று, இரண்டாவது செப்டம்பர் 11, 2023 அன்று என இரண்டு பயிற்சி சுற்றுகள் நடத்தப்படும் (https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1954309).
இந்தப் பயிற்சி சுற்றுகள் சவாலான வெளியேற்றும் சுற்றுகளுக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது பங்கேற்பாளர்களுக்கு எதிர்வரும் போட்டிக்கு தயாராவதில் தங்கள் அறிவையும் திறன்களையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
ஜி20 திங்க் நிகழ்வுக்கான காலஅட்டவணை :-: -
வ.எண்
|
நிகழ்வுகளின் பெயர்கள்
|
தேதி
|
(1)
|
பயிற்சி சுற்றுகள்
|
10, 11 செப்டம்பர் 23
|
(2)
|
வெளியேற்றும் சுற்று 1
|
12 செப்டம்பர் 23
|
(3)
|
வெளியேற்றும் சுற்று 2
|
03 அக்டோபர் 23
|
(4)
|
ஆன்லைன் காலிறுதி
|
10t அக்டோபர் 23
|
(5)
|
தேசிய அரையிறுதிப் போட்டிகள் @ என்.சி.பி.ஏ, மும்பை
|
17 நவம்பர் 23
|
(6)
|
தேசிய இறுதிப் போட்டிகள் @ கேட்வே ஆப் இந்தியா, மும்பை
|
18 நவம்பர் 23
|
(7)
|
சர்வதேச அரையிறுதிப் போட்டிகள் @ ஜி 20 பவன்
|
21 நவம்பர் 23
|
(8)
|
சர்வதேச இறுதிப் போட்டிகள் @ இந்தியா கேட், புது தில்லி
|
22 நவம்பர் 23
|
ஜி 20+9 நாடுகளைச் சேர்ந்த அறிவார்ந்த இளைஞர்களை ஒருங்கிணைக்கும் ஜி 20 திங்க் சர்வதேச சுற்றின் ஒவ்வொரு குழுவிலும் இரண்டு மாணவர்கள் இருப்பார்கள். இந்த உலகளாவிய கூட்டம் அனைத்து ஜி 20 கூட்டாளி நாடுகளையும் சேர்ந்த இளம் குடிமக்களிடையே பகிரப்பட்ட அறிவு மற்றும் தோழமை மூலம் நட்புறவை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பள்ளிகளுக்கான தடையற்ற பதிவை செயல்படுத்துவதற்கும் எளிதாக்குவதற்கும், விரிவான நிகழ்வு தொடர்பான தகவல்களை வழங்குவதற்கும், ஜி20 திங்க் என்பதற்கு ஒரு சிறப்பு வலைத்தளம் [www.theindiannavyquiz.in] நிறுவப்பட்டுள்ளது.
**********
(Release ID: 1955855)
ANU/SM/SMB/KRS
(Release ID: 1955893)
Visitor Counter : 172