பிரதமர் அலுவலகம்

புதுதில்லி ஜி20 உச்சி மாநாடு மனித நேயத்தை மையமாகக் கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் ஒரு புதிய பாதையை வகுக்கும்: பிரதமர்


இந்தியாவின் ஜி20 தலைமைப் பதவி அனைவரையும் உள்ளடக்கியது, லட்சியமானது, தீர்க்கமானது மற்றும் செயல் சார்ந்தது

கடைக்கோடியில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற காந்தியின் லட்சியத்தை பின்பற்றுவது முக்கியம்

Posted On: 08 SEP 2023 4:41PM by PIB Chennai

புதுதில்லி ஜி20 உச்சிமாநாடு மனித நேயத்தை மையமாகக் கொண்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் ஒரு புதிய பாதையை வகுக்கும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், லட்சியமிக்கதாகவும், தீர்க்கமானதாகவும், உலகளாவிய தெற்கின் வளர்ச்சி, கவலைகளுக்கு  தீவிரமாக குரல் கொடுக்கும் செயல் சார்ந்ததாகவும் உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற காந்தியின் நோக்கத்தை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான மனித நேயத்தை மையமாகக் கொண்ட வழிக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று கூறினார். 

'ஒரே பூமி', 'ஒரே குடும்பம்' மற்றும் 'ஒரே எதிர்காலம்' குறித்த அமர்வுகளுக்குத் தலைமை தாங்குவதாகவும், வலுவான, நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சீரான வளர்ச்சியை மேம்படுத்துவது உள்பட உலக சமூகத்திற்கு முக்கிய அக்கறை கொண்ட பல பிரச்சினைகளை உள்ளடக்குவதாகவும் பிரதமர் தெரிவித்தார். நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்காக பல தலைவர்கள் மற்றும் தூதுக்குழுத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவதையும் அவர் குறிப்பிட்டார்.

குடியரசுத்தலைவர் செப்டம்பர் 9 ஆம் தேதி தலைவர்களுக்கு இரவு விருந்து அளிப்பார் என்று பிரதமர் மேலும் கூறினார். செப்டம்பர் 10 அன்று ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்துவார்கள். அதே நாளில் நிறைவு விழாவில், ஜி 20 தலைவர்கள் ஆரோக்கியமான 'ஒரே பூமி' க்கான 'ஒரே குடும்பம்' போன்ற நிலையான மற்றும் சமத்துவமான 'ஒரே எதிர்காலத்திற்கான' தங்கள் கூட்டு பார்வையை பகிர்ந்து கொள்வார்கள்.

சமூக ஊடகத்தில் இதனைப் பகிர்ந்து, பிரதமர் கூறியிருப்பதாவது:

"2023 செப்டம்பர் 09-10 தேதிகளில் புது தில்லியின் புகழ்பெற்ற பாரத மண்டபத்தில் 18 வது ஜி20 உச்சிமாநாட்டை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. இந்தியா நடத்தும் முதல் ஜி20 உச்சி மாநாடு இதுவாகும். அடுத்த இரண்டு நாட்களில் உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்பார்க்கிறேன்.

புதுதில்லி ஜி20 உச்சி மாநாடு மனித நேயத்தை மையமாகக் கொண்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் ஒரு புதிய பாதையை வகுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இது என் உறுதியான நம்பிக்கை...

- நரேந்திர மோடி (@narendramodi) செப்டம்பர் 8, 2023

----

ANU/AD/PKV/KPG



(Release ID: 1955628) Visitor Counter : 177