ஜல்சக்தி அமைச்சகம்
ஜல் ஜீவன் இயக்கம் 13 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய் இணைப்பு என்ற மைல்கல்லை எட்டியது
Posted On:
05 SEP 2023 1:55PM by PIB Chennai
ஜல் ஜீவன் மிஷன் (ஜே.ஜே.எம்) இன்று கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்புகளை வழங்குவதில் 13 கோடி என்ற மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. 'வேகம் மற்றும் அளவோடு' செயல்படும், வாழ்க்கையை மாற்றும் இயக்கம், 2019 ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இயக்கத்தின் தொடக்கத்தில் வெறும் 3.23 கோடி கிராமப்புற வீடுகளில் குழாய் இணைப்பு அளிக்கப்பட்டிருந்தது. இது வெறும் 4 ஆண்டுகளில் 13 கோடியாக உயர்ந்துள்ளது. நாடு தனது 73 -வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய 2019 ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் இருந்து ஜல் ஜீவன் இயக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார். தற்போதைய நிலவரப்படி, கோவா, தெலங்கானா, ஹரியானா, குஜராத், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய 6 மாநிலங்கள், புதுச்சேரி, டையூ & டாமன் மற்றும் தாதர் & நாகர் ஹவேலி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய 3 யூனியன் பிரதேசங்கள் 100 சதவீதம் அளவுக்கு, வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பீகார் 96.39%, மிசோரம் 92.12% அளவுக்கு குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதால், அந்த இரண்டு மாநிலங்களும் விரைவில் முழு அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவா, ஹரியானா, பஞ்சாப், அந்தமான் நிக்கோபார், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் சீரான குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதை கிராம சபைகள் மூலம் கிராம மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். நாட்டில் 145 மாவட்டங்கள் மற்றும் 1,86,818 கிராமங்களில் 100% தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் இடைவிடாத முயற்சிகளின் விளைவாக, நாட்டில் உள்ள 9.15 இலட்சம் (88.73%) பள்ளிகள் மற்றும் 9.52 இலட்சம் (84.69%) அங்கன்வாடி மையங்களில் குழாய் நீர் வழங்குவதை உறுதி செய்துள்ளது. நமது நாட்டின் 112 ஆர்வமுள்ள மாவட்டங்களில், இத்திட்டம் தொடங்கப்பட்டபோது, 21.41 இலட்சம் (7.86%) வீடுகளுக்கு மட்டுமே குழாய் வழி குடிநீர் வசதி இருந்தது.
வீடுதோறும் குழாய் வழியே குடிநீர் திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு குறிப்பிடத்தக்க சமூக-பொருளாதார நன்மைகள் ஏற்படுகின்றன. வழக்கமான குழாய் நீர் விநியோகம் மக்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் இளம் சிறுமிகளை அவர்களின் அன்றாட வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கனமான பாத்திரங்களில் தண்ணீரை எடுத்துச் செல்லும் நூற்றாண்டு கால சுமையிலிருந்து விடுவிக்கிறது. சேமிக்கப்படும் நேரத்தை வருமானத்தை உருவாக்கும் நடவடிக்கைகள், புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது மற்றும் குழந்தைகளின் கல்விக்கு ஆதரவளிப்பது ஆகியவற்றுக்குப் பயன்படுத்தலாம்.
நாடு முழுவதும் 5.27 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம குடிநீர் மற்றும் சுகாதாரக் குழுக்கள் / பானி சமிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் ஆதார மேம்பாடு, சாம்பல் நீர் சுத்திகரிப்பு மற்றும் அதன் மறுபயன்பாட்டிற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டபோது, 1.79 கோடி மக்கள்தொகை கொண்ட 22,016 குடியிருப்புகள், குடிநீர் ஆதாரங்களில் ஆர்சனிக் / ஃப்ளோரைடு மாசுபாட்டால் பாதிக்கப்பட்டன. ஆர்சனிக்/ ஃப்ளோரைடு பாதித்த அனைத்து குடியிருப்புகளிலும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கிறது என்று மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் தெரிவித்துள்ளன.
ஜல் ஜீவன் இயக்கம் தண்ணீர் வழங்குவது மட்டுமல்லாமல், ஒவ்வொரு முறையும் தரமான நீர் வழங்கப்படுவதை உறுதி செய்வதில் நம்பிக்கை கொண்டுள்ளது. இது தொடர்பாக, குடிநீர் ஆதாரங்களிலிருந்தும் விநியோக இடங்களிலிருந்தும் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்படுகிறது. இத்துறையால் மேற்கொள்ளப்படும் பணிகளை அங்கீகரித்து, இந்த ஆண்டு வெள்ளி விருது பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் "குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைகளை மேம்படுத்துவதற்கான வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பயன்பாடு" என்ற பிரிவின் கீழ் வழங்கப்பட்டது.
பயன்முறை விவரங்கள்:https://ejalshakti.gov.in/jjmreport/JJMIndia.aspx
***
ANU/PKV/AG/GK
(Release ID: 1954838)
Visitor Counter : 410