பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய கடற்படை வினாடி வினா - தொடுவானத்திற்கு அப்பால் பயணம்

Posted On: 02 SEP 2023 2:35PM by PIB Chennai

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவை  நினைவுகூரும் வகையில், இந்திய கடற்படை பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான வினாடி வினா போட்டிகளை தேசிய அளவிலான பள்ளி வினாடி வினா போட்டியாக (டி.ஐ.என்.க்யூ.) உயர்த்தியது. இந்த ஆண்டு மதிப்புமிக்க ஜி 20 -ன் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றவுடன், தின்க்யூ ஒரு சர்வதேச நிகழ்வாக மாறி "G20 THINQ" என்று மறுபெயரிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு ஜி 20 செயலகத்தின் ஆதரவின் கீழ் கடற்படையால் நடத்தப்படுகிறது. என்.டபிள்யூ.டபிள்யூ.ஏ. (கடற்படையினரின் மனைவியர் நல சங்கம்) உடன் இணைந்து நடத்தப்படுகிறது. இது தேசிய மற்றும் சர்வதேச அளவிலான இரண்டு நிலைகளைக் கொண்டிருக்கும்.

ஜி 20 தின்க்யூவின் தேசிய சுற்றில் ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்கள் பங்கேற்பார்கள். வினாடி வினா போட்டிக்கு 11,700-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பதிவு செய்துள்ளன.

செப்டம்பர் 12, அக்டோபர் 3 ஆகிய தேதிகளில்  இரண்டு ஆன்லைன் வெளியேற்றச்  சுற்றுகள் நடைபெறும். இதைத் தொடர்ந்து அக்டோபர் 10 மற்றும் 23ம் தேதிகளில் ஆன்லைன் காலிறுதிப் போட்டி நடைபெறும், இதில் 16 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு (ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் நான்கு பள்ளிகள்) தகுதி பெறும்.  நவம்பர் 17-ம் தேதி மும்பையில் உள்ள என்.சி.பி.ஏ ஆடிட்டோரியத்தில்  தேசிய அரையிறுதிப் போட்டி நடைபெறும்.  முதல் 08 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நவம்பர் 18 ஆம் தேதி கேட்வே ஆஃப் இந்தியாவில் நடைபெறும் தேசிய இறுதிச் சுற்றில் மோதும். தேசிய சுற்று முடிந்ததும், அனைத்து இறுதிப் போட்டியாளர்களில் இரண்டு சிறந்த வினாடி வினா வீரர்கள் சர்வதேச சுற்றில் இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்த தேர்வு செய்யப்படுவார்கள்.

ஜி 20 தின்க்யூவின் சர்வதேச சுற்று உலகெங்கிலும் உள்ள இளம் மற்றும் பிரகாசமான மனங்களின் பிரதிநிதித்துவத்தைக் காணும்.  இந்த சுற்றில் ஜி 20 நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களான இதர 9 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் இரண்டு மாணவர்களைக் கொண்டிருக்கும். 16 தேசிய அரையிறுதிப் போட்டியாளர்கள் மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்கள் உட்பட அனைத்து பிரதிநிதிகளும் தங்கள் பயணத்தின் போது இந்தியாவின் மாறுபட்ட பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள், மேலும் நாட்டின் பல்வேறு பிரபலமான சுற்றுலா தளங்கள் மற்றும் பிரசித்தி பெற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். சர்வதேச இறுதிப்போட்டிகள் வரும் நவம்பர் 22ம் தேதி தில்லியில் நடைபெற உள்ளது.

 

பள்ளிகளுக்கான பதிவு செயல்முறையை ஒழுங்குபடுத்துவதற்கும், நிகழ்வு தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்குவதற்கும், ஜி 20 THINQ க்காக ஒரு பிரத்யேக வலைத்தளம் (www.theindiannavyquiz.in) நிறுவப்பட்டுள்ளது.

 

டிசம்பர் 01, 23 அன்று இந்தியா ஜி 20 மாநாட்டை பிரேசிலிடம் ஒப்படைக்கும் போது, 2022 டிசம்பர் முதல் நடைபெற்ற பல முக்கிய நிகழ்வுகளின் இறுதி அத்தியாயமாக ஜி 20 டி.என்.க்யூ இருக்கும். உலக அளவில் ஜி 20 மாநாட்டின் பல தனித்துவமான சாதனைகளைக் கண்ட இந்தியாவின் தலைமைத்துவத்துக்கு  இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும். 

***

SM/ANU/PKV/DL



(Release ID: 1954347) Visitor Counter : 162