கனரகத் தொழில்கள் அமைச்சகம்

கனரகத் தொழில்துறை அமைச்சகம், "பி.எல்.ஐ-ஆட்டோ திட்டத்தின் ஆய்வு – தற்சார்பு மூலம் செயல்திறன் " என்ற மாநாட்டை நாளை நடத்துகிறது

Posted On: 28 AUG 2023 1:01PM by PIB Chennai

கனரகத் தொழில்துறை அமைச்சகம் (எம்.எச்.) "பி.எல்.-ஆட்டோ திட்டத்தின் ஆய்வு - தற்சார்பு  மூலம் செயல்திறன் " என்ற தலைப்பில் நாளை அதாவது ஆகஸ்ட் 29, 2023 அன்று இந்தியா ஹாபிடட் மையத்தில் ஒரு மாநாட்டை  நடத்துகிறது . இந்த மாநாட்டிற்கு மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே தலைமை தாங்குகிறார்  . பி.எல்.-ஆட்டோ விண்ணப்பதாரர்கள், பி.எம்., சோதனை முகமைகள் போன்ற பங்குதாரர்களை ஒன்றிணைத்து திட்டத்தின் செயல்திறனை மதிப்பாய்வு செய்வதையும், அவர்களின் அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதையும், அனைத்து கவலைகள் மற்றும் சவால்களை நிவர்த்தி செய்வதையும் இந்த  நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளைப் புரிந்து கொள்வதில் இந்த நிகழ்வில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

தூய்மையான இயக்கத்தை ஊக்குவிப்பதற்கும், புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தின் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் எம்.எச்.  பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளது. வாகன உற்பத்தி துறையில், அமைச்சகம் பல்வேறு முதன்மை திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அவற்றில் ஒன்று வாகனங்கள்  மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம் (ரூ .25,938 கோடி ஒதுக்கீடு) ஆகும்.

இந்தத் திட்டங்களின் தாக்கம் வாகனத் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும், மேலும் 2030 ஆம் ஆண்டில் இந்திய வாகனத்துறை உலகில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாகனத் தொழில்துறையின் பி.எல்.-ஆட்டோ விண்ணப்பதாரர்களை திட்டத்தின் முக்கியப் பங்குதாரர்களில் ஒருவராக எம்.எச். கருதுகிறது. பிரதமரின் தொலைநோக்குப் பார்வையான "தற்சார்பு மூலம் சிறந்து விளங்குதல்" என்ற தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற தொழில்துறைக்கு  ஆதரவளிக்க எம்.எச். உறுதிபூண்டுள்ளது. நாட்டிற்குள் மேம்பட்ட வாகன தொழில்நுட்பம்  தயாரிப்புகளின் ஆழமான உள்ளூர்மயமாக்கல் மற்றும் வளர்ச்சியின் இலக்கை, வாகனத் தொழில்துறையின் ஆதரவு மற்றும் வளர்ச்சி இல்லாமல் அடைய முடியாது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கான நிதி உதவி மற்றும் உகந்த சூழலை வழங்குவதன் மூலம் இந்த முக்கியமானத் தொழிலை வலுப்படுத்த மத்திய அரசு  தார்மீக பொறுப்பை  ஏற்கிறது.  

(வெளியீட்டு ஐடி: 1952861)


AP/ANU/ PKV/KRS



(Release ID: 1953045) Visitor Counter : 137