பிரதமர் அலுவலகம்
தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் பயணத்தில் இருந்து திரும்பியவுடன் ஆகஸ்ட் 26 அன்று பெங்களூருவில் இஸ்ரோவின் டெலிமெட்ரி கண்காணிப்பு மற்றும் கட்டளை நெட்வொர்க் தளத்திற்குப் பிரதமர் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்
சந்திரயான்-3 இயக்கத்தில் தொடர்புடைய இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் கலந்துரையாடுவார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 AUG 2023 7:59PM by PIB Chennai
பெங்களூருவில் இஸ்ரோவின் டெலிமெட்ரி கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நெட்வொர்க் தளத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 26 அன்று காலை 7.15 மணி அளவில் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் பயணத்தில் இருந்து திரும்பியவுடன் அவர் பெங்களூரு செல்வார்.
சந்திரயான்-3 இயக்கத்தில் தொடர்புடைய இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து அவர்களுடன் பிரதமர் கலந்துரையாடுவார். சந்திரயான்-3 இயக்கத்தின் கண்டறிதல்கள் மற்றும் முன்னேற்றம் குறித்து அவரிடம் எடுத்துரைக்கப்படும்.
***
(Release ID: 1952256)
SM/SMB/RS/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1952280)
வருகையாளர் எண்ணிக்கை : 182
இந்த வெளியீட்டை படிக்க:
Punjabi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam