சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதாரச் சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை (நமஸ்தே)"

Posted On: 25 AUG 2023 2:30PM by PIB Chennai

கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் அரசின் பிற முயற்சிகளால், இத்தகையை தொழிலாளர்களுக்கு ஏற்படும் ஆபத்து பெரும்பாலும் தடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கழிவுநீர் தொட்டிகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்வதால் ஏற்படும் இறப்புகள் பற்றிய செய்திகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியிடப்படுகின்றன. இத்தகைய சம்பவங்கள்  உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட மாநில அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

இந்நிலையில், கழிவுநீர் தொட்டிகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்வதும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  கடைப்பிடிக்கப்படாததும் இப்போது முக்கியப் பிரச்சினையாக உள்ளது. இதனால் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் இழக்கப்படுகின்றன. அபாயகரமான முறையில் சுத்தம் செய்வதை நிறுத்தவும், செப்டிக் டேங்க் தொழிலாளர்களின் இறப்பைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்தவும், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதாரச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை (நமஸ்தே) என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளன.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் தற்போதைய கூறுகள் நமஸ்தே திட்டத்தின் கூறுகளாக வைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் 2025-26 வரையிலான மூன்று ஆண்டுகளில் ரூ.349.70 கோடி மதிப்பீட்டில் நாட்டின் 4800+ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

***

SM/ANU/SMB/RS/KPG

 


(Release ID: 1952211) Visitor Counter : 164