விண்வெளித்துறை

சந்திரயான் -3 திட்டம் இந்தியாவுக்கு பரந்த சர்வதேச ஒத்துழைப்பை ஈர்க்கிறது- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 22 AUG 2023 6:16PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு),  பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், சந்திரயான் -3 திட்டம் இந்தியாவுக்கான பரந்த சர்வதேச ஒத்துழைப்பை ஈர்க்கிறது என்று கூறினார் .

தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சர் (எம்ஐடிசிஐ) திரு தர்சானந்த் தீபக் பால்கோபின் தலைமையிலான உயர்மட்ட மொரீஷியஸ் தூதுக்குழு இன்று புதுதில்லியில் அவரைச் சந்தித்து இந்தியா-மொரீஷியஸ் கூட்டு செயற்கைக்கோளுக்கான முன்மொழிவு குறித்து விவாதித்த பின்னர் அமைச்சர் பேசினார் .  

மொரீஷியஸில் உள்ள இஸ்ரோவின் தரை நிலையத்தை மூன்றாம் தரப்பு பணிகளுக்கு ஆதரவளிக்க பயன்படுத்த இந்தியாவும் மொரீஷியஸும் ஒப்புக் கொண்டுள்ளன .

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க பயணத்தின் போது ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் மூலம், விண்வெளித் துறையில் உலகின்  பிற  நாடுகளுடன் சம பங்காளியாக ஒத்துழைப்பதற்கான தனது திறனை இந்தியா நிரூபித்துள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

கடந்த 17-ம் தேதி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தளங்களை பால்கோபின் பார்வையிட்டார். முன்மொழியப்பட்ட இந்தியா - மொரீஷியஸ் கூட்டு செயற்கைக்கோளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் பயன்பாட்டு திறன்களை இஸ்ரோ, அமைச்சரிடம் சமர்ப்பித்தது.

 

மொரீஷியஸில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரோவின் தரை நிலையத்தின் எல்லையை ஐரோப்பிய விண்வெளி முகமை உள்ளிட்ட மூன்றாம் தரப்பு பயணங்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்த இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர், மேலும் அத்தகைய ஒத்துழைப்பை எளிதாக்க தற்போதுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய  திட்டமிடப்பட்டுள்ளது.

3 தசாப்தங்களுக்கும் மேலாக செயற்கைக்கோள் மற்றும் ஏவுகலங்களைக் கண்காணிப்பதற்கான இஸ்ரோவின் தரை நிலையத்தை மொரீஷியஸ் நடத்தியுள்ளது, தற்போது இந்த தரை நிலையம் மொரீஷியஸில் இயக்கப்படும் இரண்டு ஆண்டெனாக்களுடன் (11 மீ விட்டம்) தொடர்ந்து நிர்வகிக்கப்படுகிறது.

*******

 

ANU/AP/PKV/KRS



(Release ID: 1951232) Visitor Counter : 113