பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
2023 ஜூன்-ஜூலை மாதத்திற்கான நிர்வாக செயலகங்களின் சீர்திருத்த அறிக்கை வெளியீடு
88.94 சதவீத மக்கள் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது
Posted On:
22 AUG 2023 12:04PM by PIB Chennai
2023 ஜூன்-ஜூலை மாதத்திற்கான “நிர்வாக செயலக சீர்திருத்தங்கள்" குறித்த மாதாந்திர அறிக்கையை நிர்வாகச் சீர்திருத்தகங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை வெளியிட்டுள்ளது.
2023 ஜூன்- ஜூலை மாத அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
தூய்மை இயக்கம் மற்றும் நிலுவைத் தொகையைக் குறைத்தல்
- 3.22 லட்சம் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. அடையாளம் காணப்பட்ட 1.96 லட்சம் கோப்புகளில் 1.49 லட்சம் கோப்புகள் தொடர்பாக தீர்வு காணப்பட்டது.
- பெறப்பட்ட 9.70 லட்சம் புகார்களில் 8.63 இலட்சம் மக்கள் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது (தீர்வு விகிதம்-88.94%)
- 2023 ஜூன்- ஜூலை மாதங்களில் 40.64 லட்சம் சதுர அடி இடம் விடுவிப்பு
- 2023 ஜூன்-ஜூலை மாதங்களில் குப்பை அகற்றுதல் மூலம் ஈட்டிய வருவாய் ரூ.37.56 கோடி
- 7,186 இடங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது
முடிவெடுப்பதில் செயல்திறனை அதிகரித்தல்
- மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலதாமதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
- 43 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் 2021-2023 பிரதிநிதிக்குழு உத்தரவை மறுஆய்வு செய்து மாற்றியமைத்துள்ளன
- 40 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் அலுவல் அதிகாரி செயல்முறை நடைமுறையில் உள்ளது.
மின்-அலுவலக அமலாக்கம் மற்றும் ஆய்வு
- 75 அமைச்சகங்களும் மின்-அலுவலகம் 7.0 மென்பொருளை ஏற்றுக்கொண்டுள்ளன.
- மத்திய தலைமைச் செயலகத்தில் உள்ள 9.24 லட்சம் காகிதக் கோப்புகளும் 27.44 லட்சம் மின் கோப்புகளும் உள்ளன.
- 10 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் 2023 ஜூன் மாதத்தில் 100 சதவீத மின்-ரசீது நடைமுறையை செயல்படுத்தியுள்ளன.
- 2023 மே மாதத்தில் 91.43 சதவீதமாக இருந்த மின் ரசீதுகள் ஜூன் மாதத்தில் 91.92 சதவீதமாக அதிகரித்துள்ளது
சிறந்த நடைமுறைகள்
தொலைத்தொடர்புத் துறை: ஊழியர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக, சஞ்சார் பவனில் உள்ள தொலைத்தொடர்புத் துறையில் ஒரு அறை உடற்பயிற்சி கூடமாக மாற்றப்பட்டு, 23.06.2023 அன்று திறக்கப்பட்டது.
உயிரித் தொழில்நுட்பத்துறை: விண்ணப்பதாரர்கள் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கவும், திட்டங்களின் தொகுப்பை உருவாக்கவும், மின் புத்தகம், போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. பயோடெக்னாலஜி துறையின் (டிபிடி) பல்வேறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் அறிவிப்புகளுக்குக் காத்திருக்காமல், விண்ணப்பத்தாரர்கள் ஆண்டு முழுவதும் ஆராய்ச்சி மானிய திட்ட முன்மொழிவு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இ-ப்ரோமிஸ் (eProMIS) செயல்முறை உதவுகிறது.
வணிகத் துறை: இந்த துறை, அதன் ஊழியர்களின் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிக்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வருடாந்திர திறன் மேம்பாட்டுத் திட்டத்தைத் தவிர அதன் தக்ஷதா என்ற திட்டத்தின் கீழ், மொத்த ஊழியர்களில் 30 சதவீதம் பேர் பயிற்சிகளை நிறைவு செய்துள்ளனர். அனைத்து ஊழியர்களும் அணுகக்கூடிய ஒரு தளத்தை இத்துறை உருவாக்கியுள்ளது. இது தரவு பகிர்தல் மற்றும் நிர்வாக நடைமுறைகளை டிஜிட்டல் மயமாக்க உதவுகிறது.
***
ANU/AD/PLM/RS/KPG
(Release ID: 1951046)
Visitor Counter : 125