குடியரசுத் தலைவர் செயலகம்
ராணுவ வீரர்களின் மனைவியரால் ஏற்பாடு செய்யப்பட்ட உத்வேகமூட்டும் கதைகள் நிகழ்வான அஸ்மிதாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்
Posted On:
21 AUG 2023 1:35PM by PIB Chennai
புதுதில்லியில் இன்று (ஆகஸ்ட் 21, 2023) ராணுவ வீரர்களின் மனைவியர் சங்கம் (ஏ.டபிள்யூ.டபிள்யூ.ஏ) ஏற்பாடு செய்திருந்த 'அஸ்மிதா-ராணுவ வீரர்களின் மனைவியரின் உத்வேகமூட்டும் கதைகள்' நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் , அனைத்து இந்தியர்கள் சார்பிலும் 'வீர மங்கை'களுக்கு நன்றி தெரிவித்தார். அஸ்மிதா அடையாளங்கள் என்று கெளரவிக்கப்பட்ட 'வீர மங்கை'களை அவர் பாராட்டினார். 'வீர மங்கை'களின் நலனுக்காக ஏ.டபிள்யூ.டபிள்யூ.ஏ மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
ஒரு சமூகம் மற்றும் தேசத்தின் கண்ணியம் என்பது பெண்களின் சுயமரியாதையை அடிப்படையாகக் கொண்டது என்று குடியரசுத் தலைவர் கூறினார். சில பழைய யோசனைகளை விட்டுவிட்டு புதிய யோசனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். 'ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்' என்ற பழமொழியைக் குறிப்பிட்ட அவர், 'ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்கும் அருகில், ஒரு பெண் இருக்கிறாள்' என்பது புதிய பழமொழியாக இருக்க வேண்டும் என்றார். . முற்போக்கான சிந்தனைகளைப் பின்பற்றுவதன் மூலம் பெண்களின் அடையாளத்தையும் தன்னம்பிக்கையையும் வலுப்படுத்த முடியும் என்பதை அவர் பகிர்ந்துகொண்டார்.
***
ANU/AP/SMB/GK
(Release ID: 1950762)
Visitor Counter : 130