சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையில் உறுதிமொழி ஏற்புடன் நல்லிணக்க தினம் கடைப்பிடிக்கப்பட்டது

प्रविष्टि तिथि: 18 AUG 2023 3:17PM by PIB Chennai

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி 'நல்லிணக்க தினம்'  நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு அந்தத் தேதியில் ஞாயிற்றுக்கிழமை வருவதால், நல்லிணக்க  உறுதிமொழி ஏற்பு இன்று, அதாவது ஆகஸ்ட் 18, 2023 அன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்படி செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை லுவலர்கள் இன்று காலை 11 மணிக்கு மத்திய அரசு அலுவலகங்கள் வளாகத்தில் உள்ள அந்த்யோதயா பவனில் 'நல்லிணக்க உறுதிமொழி' ஏற்றனர்.

அனைத்து மதங்கள், மொழிகள் மற்றும் பிராந்திய மக்களிடையே தேசிய ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. வன்முறையைத் தவிர்ப்பதும், மக்களிடையே நல்லெண்ணத்தை நிலைநிறுத்துவதும் இந்த தினத்தின் நோக்கமாகும்.

***

SM/ANU/SMB/RS/KPG


(रिलीज़ आईडी: 1950120) आगंतुक पटल : 209
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Telugu