சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஒரே பூமி, ஒரே இந்திய சுகாதார மேம்பாட்டுக்கான நலவாழ்வு தொடக்க நிகழ்ச்சியில் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சிறப்புரையாற்றினார்
Posted On:
17 AUG 2023 2:42PM by PIB Chennai
மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஒரே பூமி, ஒரே இந்திய சுகாதார மேம்பாட்டுக்கான நலவாழ்வு தொடக்க விழாவில் ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் ஆகியோர் முன்னிலையில் சிறப்புரையாற்றினார்.
நோயாளிக்கான இந்திய மேம்பட்ட சுகாதாரம் நலவாழ்வு – ஒரு டிஜிட்டல் இணையதளம் மற்றும் தொழிலாளர் இயக்கம் ஆகிய இணையதளத்தை டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், ஆரம்ப சுகாதார மற்றும் டிஜிட்டல் சுகாதாரத் துறைகளில் இந்தியா உலகளவிலும் அதன் சொந்த நாட்டிலும் சுகாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது என்று கூறினார்.
சுகாதார கண்டுபிடிப்புகளில் இந்தியா எப்போதும் முன்னணியில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த இணையதளங்கள் மூலம், இன்று சுகாதாரத்தில் மிக முக்கியமான சில சவால்களுக்கு உறுதியான தீர்வை நாங்கள் வழங்குகிறோம் என்று அவர் கூறினார்.
இந்திய சுகாதார அமைப்பைப் பற்றி விவரித்த சுகாதார அமைச்சர், இந்தியா இன்று 1.3 மில்லியன் அலோபதி மருத்துவர்கள், 800,000 ஆயுஷ் மருத்துவர்கள் மற்றும் 3.4 மில்லியன் செவிலியர்கள் மற்றும் துணை செவிலியர் மற்றும் மருத்துவச்சிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார். இந்தியாவில் சுகாதாரம் ஒரு சேவையாக கருதப்படுகிறது என்பதை கூறிய அவர், மக்களை மையமாகக் கொண்ட, மதிப்பு அடிப்படையிலான சுகாதார அமைப்பை உருவாக்க நாடு விரும்புகிறது என்பதை எடுத்துரைத்தார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி மற்றும் சவுதி அரேபியாவுடன் பல்வேறு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான இருதரப்பு சந்திப்பு, ஆயுர்வேத தொலைமருத்துவத்தின் மீது ஒரு குறிப்பிட்ட கவனம் செலுத்தி சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவது மற்றும் நோய் கண்காணிப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான திறன்களை மேம்படுத்துதல் ; ஐரோப்பிய ஒன்றியத்தை தளமாகக் கொண்ட மருந்து நிறுவனங்களுக்கு இந்தியாவில் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆராய்ச்சி, மருத்துவ மதிப்பு பயணம் மற்றும் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சாத்தியமான கூட்டு முயற்சிகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பின் பகுதிகளை ஆராய்வதில் கவனம் செலுத்தியது.
மாலத்தீவு அரசின் சுகாதார இணை அமைச்சர் திரு ஷா மாஹிர், மாலத்தீவு அரசின் சுகாதார துணை அமைச்சர் திருமதி சஃபிய்யா மொஹமட் சயீத், சோமாலியா அரசின் சுகாதார துணை அமைச்சர் டாக்டர் மொஹமட் ஹசன் மொஹமட், நேபாள கூட்டாட்சி ஜனநாயக குடியரசின் சுகாதார மற்றும் மக்கள் தொகை அமைச்சர் திரு.மொஹான் பகதூர் பஸ்னெட் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சர் கௌரவ டாக்டர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
------------
SM/ANU/IR/RS/KPG
(Release ID: 1949863)
Visitor Counter : 158