பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு முறை குறித்து நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்புத் துறை வெளியிட்டுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் செயல்திறன் தொடர்பான 2023, ஜூலை மாதத்திற்கான 12-வது அறிக்கை
Posted On:
16 AUG 2023 3:01PM by PIB Chennai
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் செயல்திறன் தொடர்பான 2023, ஜூலை மாதத்திற்கான 12-வது அறிக்கையை மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு முறை குறித்து நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்புத் துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை பொதுமக்களின் குறைகளின் வகைகள் மற்றும் தீர்வுகளின் தன்மை பற்றிய விரிவான பகுப்பாய்வை வழங்குகிறது.
ஜூலை 2023-ல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் மொத்தம் 69,523 குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு முறை இணைய தளத்தில் பெறப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிலுவையில் உள்ள புகார்கள் 1,79,077-ஆக குறைந்துள்ளன.
மே, 2023 முதல், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு முறை இணைய தளம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் செயல்திறன் அடிப்படையில் தரவரிசைப்படுத்தும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது. தற்போது நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்புத் துறை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை 4 பிரிவுகளில் தரவரிசைப்படுத்துகிறது.
01.01.2023 முதல் 31.07.2023 வரையிலான காலக்கட்டத்தில் இரண்டு பரிமாணங்களில் (தரம் மற்றும் சரியான நேரத்தில் குறைகளை நிவர்த்தி செய்தல்) மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 4 பிரிவுகளில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் முதல் 3 செயல்திறன் கொண்ட மாநிலங்கள் பின்வருமாறு:
வரிசை எண்.
|
கூட்டம்
|
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள்
|
தரவரிசை 1
|
தரவரிசை 2
|
தரவரிசை 3
|
1
|
குழு ஏ
|
வடகிழக்கு மாநிலங்கள்
|
சிக்கிம்
|
அசாம்
|
அருணாச்சலப் பிரதேசம்
|
2
|
குழு பி
|
யூனியன் பிரதேசங்கள்
|
லட்சத்தீவு
|
அந்தமான் & நிக்கோபார்
|
லடாக்
|
3
|
குழு சி
|
குறைகள் உள்ள மாநிலங்கள்
>= 20000
|
உத்தரப் பிரதேசம்
|
ஜார்க்கண்ட்
|
ராஜஸ்தான்
|
4
|
குழு டி
|
குறைகள் உள்ள மாநிலங்கள்
< 20000
|
தெலங்கானா
|
சத்தீஸ்கர்
|
கேரளா
|
***
(Release ID: 1949367)
AD/ANU/IR/RS/GK
(Release ID: 1949636)
Visitor Counter : 161