குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
திரு அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி அன்னாருக்கு குடியரசு துணைத்தலைவர் மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
16 AUG 2023 1:44PM by PIB Chennai
முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி, குடியரசு துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் இன்று அன்னாரது நினைவிடமான 'சடைவ் அடல்' சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த தலைவரின் நினைவாக நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோருடன் அவர் கலந்து கொண்டார்.
இது குறித்து குடியரசு துணைத்தலைவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
மதிப்பிற்குரிய அடல் அவர்களின் நினைவு நாளில் அன்னாருக்கு பணிவான மரியாதை. அவரது தொலைநோக்குப் பார்வை, சாதுர்யம் மற்றும் நல்லாட்சியில் கவனம் ஆகியவை ஒரு முக்கியமான காலகட்டத்தில் இந்தியாவை கட்டமைத்தன. அவரது பாரம்பரியம் நம் அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.
***
ANU/AD/IR/RS/GK
(रिलीज़ आईडी: 1949336)
आगंतुक पटल : 171