குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி

प्रविष्टि तिथि: 14 AUG 2023 4:20PM by PIB Chennai

நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமிர்த காலத்தின் இந்த தொடக்கத்தில் , கடந்த எழுபத்தாறு ஆண்டுகளின் முன்னேற்றம் மற்றும் சாதனைகளில் நாம் மகிழ்ச்சியடையும் அதே வேளையில், இந்தியா சுதந்திரம் பெற வழிவகுத்த நமது வீரமிக்க சுதந்திர போராட்ட வீரர்களின் அசாதாரண தியாகங்களை கௌரவிப்போம். அவர்களின் அசைக்க முடியாத தைரியம் நமக்கு ஊக்கமளிக்கிறது, மேலும் நமது சுதந்திரத்தையும் ஜனநாயக விழுமியங்களையும் நன்றியுடன் மதிக்க நினைவூட்டுகிறது. இன்று, நவீன இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையாளர்கள் மற்றும் சிற்பிகளுக்கு நாம் அஞ்சலி செலுத்துகிறோம், அவர்களின் அயராத முயற்சிகள் ஒரு வலுவான, பன்முகத்தன்மை கொண்ட மற்றும் நெகிழ்ச்சியான நாட்டிற்கு வழிவகுத்தன.

இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில், ஒற்றுமை, நீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய முக்கிய அரசியலமைப்பு கொள்கைகளுக்கான நமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவோம். கைகோர்த்து நாம் முன்னேறிச் செல்லும்போது, 'பாரதத்தின்' பாரம்பரிய நாகரிக நெறிமுறைகளை உள்ளடக்கிய உறுதியான , முற்போக்கான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்குவோம்.

***

AP/ANU/IR/RS/GK


(रिलीज़ आईडी: 1948567) आगंतुक पटल : 193
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Kannada