பிரதமர் அலுவலகம்
17 மொழிகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முறைகள் விளையாடப்பட்ட உலகின் மிகப்பெரிய விநாடி வினாப் போட்டிகளில் ஒன்றான ஜிக்யாசாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
14 AUG 2023 10:16AM by PIB Chennai
இந்தியாவின் பழங்கால நாகரிக மாண்புகள், கலாச்சார பரிணாமங்கள், வளமான மற்றும் ஒளிமை மிக்க பண்புகள் குறித்து 17 மொழிகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முறைகள் விளையாடப்பட்ட உலகின் மிகப்பெரிய விநாடி வினாப் போட்டிகளில் ஒன்றான ஜிக்யாசாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரியின் ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் கூறியதாவது:
“ஜிக்யாசா போட்டியின் வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள். நமது இளைஞர்களிடையே நம் கலாச்சாரம் மற்றும் வரலாறு குறித்த அறிவை மேம்படுத்தும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட விரிவான முயற்சியாக இது அமைந்தது. இந்த விநாடி வினாப் போட்டிக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு, மகிழ்ச்சி அளிக்கிறது.”
***
AP/BR/AG
(रिलीज़ आईडी: 1948445)
आगंतुक पटल : 230
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi
,
Bengali
,
Malayalam
,
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada