குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
புதுதில்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ள 18 வகையான தொழில்களைச் சேர்ந்த கதர் கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
Posted On:
13 AUG 2023 1:04PM by PIB Chennai
தில்லி செங்கோட்டையில் இந்த ஆண்டு நடைபெறும் சுதந்திர தின விழாவில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 1800 சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். பிரதமர் திரு. நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றும் விழாவிற்கும், இந்த நிகழ்வில் அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரையைக் கேட்பதற்கும் மத்திய அரசு அவர்களை அழைத்துள்ளது.
இந்த ஆண்டு புதுதில்லியில் நடைபெறும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து 18 வெவ்வேறு தொழில்களைச் சேர்ந்த 50 கதர் கைவினைஞர்கள் மற்றும் 62 கைவினைஞர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கு எம்.எஸ்.எம்.இ அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. ஆகஸ்ட் 15, 2023 அன்று புதுதில்லி செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் சுதந்திர தினக் கொடியை ஏற்றும் விழாவில் கலந்து கொண்ட பின்னர், அவர்கள் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் திரு நாராயண் ரானேவின் இல்லத்தில் நடைபெறும் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
தேசத்தைக் கட்டியெழுப்புவதில் கதர் கைவினைஞர்களின் பங்களிப்புக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் வகையில் இந்தியா முழுவதிலுமிருந்து அவர்கள் வரவழைக்கப்படும் முயற்சியை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
**************
ANU/AP/RB/DL
(Release ID: 1948293)
Visitor Counter : 170