சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலம் கையகப்படுத்துதலுக்கு நியாயமான இழப்பீடு

प्रविष्टि तिथि: 09 AUG 2023 3:31PM by PIB Chennai

முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தல் பொதுவாக விவசாயிகளால் வலுவான எதிர்ப்பை எதிர்கொள்ளவில்லை.  இருப்பினும், பஞ்சாப் மாநிலத்தில் ஒரு சில இடங்களில் இழப்பீட்டை அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

 தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம், 1956- இன் விதிகளின் கீழ் தேசிய நெடுஞ்சாலைக்கான நிலம் கையகப்படுத்தப்பட்டாலும், நியாயமான இழப்பீடு மற்றும் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்தில் வெளிப்படைத்தன்மை சட்டம், 2013 இன் விதிகளின்படி நிலத்தின் இழப்பீடு தீர்மானிக்கப்படுகிறது. இது நிலத்தின் நிர்ணயிக்கப்பட்ட சந்தை மதிப்பை விட 2 முதல் 4 மடங்கு ஆகும்.

இத்தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

*****

SM/ANU/IR/RS/KPG

 


(रिलीज़ आईडी: 1947228) आगंतुक पटल : 745
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi