கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா முழுவதும் நாளை (ஆகஸ்ட் 9) முதல் எனது மண் எனது தேசம் என்ற இயக்கம் தொடங்குகிறது

Posted On: 08 AUG 2023 7:13PM by PIB Chennai

நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த 'வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு தழுவிய அளவில் "எனது மண் எனது தேசம்" என்ற இயக்கம் நாளை (ஆகஸ்ட் 9,2023) தொடங்கப்பட உள்ளது. 2023 ஆகஸ்ட் 9  முதல் 30 வரை, “எனது மண் எனது தேசம்” இயக்கத்தில் கிராமம், மற்றும் வட்டார அளவிலும் உள்ளாட்சி அமைப்புகள் நிலையிலும் மாநில மற்றும் தேசிய அளவிலும்  நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்த இயக்கத்தில் துணிச்சலான இதயங்களை (வீர்ஸ்) நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளும் அடங்கும். அவர்களை நினைவுகூரும் வகையில் கல்வெட்டுகள் கிராம ஊராட்சிகளில் நிறுவப்படும். இந்த இயக்கம் 2021 மார்ச் 12 அன்று தொடங்கிய 'சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா' வின் நிறைவு நிகழ்வாகும். இந்தியா முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  மக்கள் பங்கேற்பை கொண்டுள்ளது.

பிரதமர் திரு. நரேந்திர மோடி அண்மையில் மனதின் குரல் ஒலிபரப்பின் போது இந்த இயக்கத்தை அறிவித்தார். இந்த இயக்கம் நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த துணிச்சலான சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் துணிச்சலான இதயங்களை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது .

கிராமம், ஊராட்சி, ஒன்றியம், நகரம், நகராட்சி போன்ற பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் வீரர்களின் தியாக உணர்வை போற்றும் வகையில் நினைவுத் தூண்கள் அமைக்கப்பட உள்ளன. அதில் அந்த பிராந்தியத்தைச் சேர்ந்த நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களின் பெயர்களுடன் பிரதமரின் செய்தி இடம்பெறும்.

 

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் 7500 கலசங்களில் மண் கொண்டுவந்து தில்லியில் 'அமிர்த தோட்டம்' உருவாக்க 'அமிர்த கலச யாத்திரை' நடத்தப்படும். இந்த ' அமிர்த தோட்டம்' ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதற்கான உறுதிப்பாட்டைக் குறிக்கும்.

கடந்த ஆண்டு, "வீடுதோறும் மூவண்ணக்கொடி" நிகழ்ச்சி, அனைவரின் பங்கேற்பால் பெரும் வெற்றி பெற்றது. இந்த ஆண்டும், 2023 ஆகஸ்ட் 13 முதல் 15 வரை இது கொண்டாடப்பட உள்ளது. எல்லா இடங்களிலும் இந்தியர்கள் தேசியக் கொடியை ஏற்றலாம், கொடியுடன் செல்ஃபி எடுக்கலாம், வலைத்தளத்தில் பதிவேற்றலாம்.

எனது மண் எனது தேசம் என்பதற்கான இணையதளம் https://merimaatimeradesh.gov.in  போர்டல் https:// yuva.gov.in

வீடுகள்தோறும் மூவண்ணக்கொடி வலைத்தளம் https://harghartiranga.com

****

SM/ANU/SMB/RS/KRS


(Release ID: 1946894) Visitor Counter : 202