தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

"ஒளிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை மறுஆய்வு செய்வது" குறித்த ஆலோசனை அறிக்கையை டிராய் வெளியிட்டது

Posted On: 08 AUG 2023 2:43PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) "ஒளிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை மறுஆய்வு செய்வது" குறித்த ஆலோசனை அறிக்கையை இன்று வெளியிட்டது.

கேபிள் டிவி துறையின் முழுமையான டிஜிட்டல்மயமாக்கலுக்கு இணங்க, டிராய் 3 மார்ச் 2017 அன்று ஒளிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை அறிவித்தது.  சென்னை உயர் நீதிமன்றம் மற்றும்  உச்ச நீதிமன்றத்தில் சட்டரீதியான பரிசீலனைகளுக்குப் பிறகு, இந்த கட்டமைப்பு 2018 டிசம்பர்29 முதல் நடைமுறைக்கு வந்தது.

ஒழுங்குமுறை கட்டமைப்பு 2017 ஐ அமல்படுத்திய பிறகு எழுந்த சில சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்காக, சம்பந்தப்பட்டவர்களுடன்  முறையான ஆலோசனை செயல்முறைக்குப் பிறகு, டிராய் 2020 ஜனவரி 1 அன்று கட்டண திருத்த உத்தரவு 2020, இன்டர்கனெக்ஷன் திருத்த ஒழுங்குமுறைகள் 2020 மற்றும் கியூஓஎஸ் திருத்த ஒழுங்குமுறைகள் 2020 ஆகியவற்றை உள்ளடக்கிய திருத்தப்பட்ட கட்டமைப்பை அறிவித்தது.

சில பங்குதாரர்கள் இந்தக் கட்டமைப்பின்  விதிகளை எதிர்த்து மும்பை மற்றும் கேரளா உயர் நீதிமன்றம் உட்பட பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். திருத்தப்பட்ட 2020 ஆம் ஆண்டின் செல்லுபடியாகும் தன்மையை ஓரிரு விதிகளைத் தவிர உயர் நீதிமன்றங்கள் உறுதி செய்தன.

நெட்வொர்க் திறன் கட்டணம் (என்.சி.எஃப்), மல்டி-டிவி வீடுகள் மற்றும் திருத்தப்பட்ட கட்டமைப்பு 2020 இன் நீண்டகால சந்தாக்கள் தொடர்பான விதிகள் செயல்படுத்தப்பட்டன.

இருப்பினும், ஒளிபரப்பாளர்களால் புதிய கட்டணங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, விநியோக தள ஆபரேட்டர்கள் (டிபிஓக்கள்), உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் சங்கங்கள் (எல்.சி.ஓ) மற்றும் நுகர்வோர் அமைப்புகளிடமிருந்து டிராய் கோரிக்கைகளைப் பெற்றது. ஒளிபரப்பாளர்களால் அறிவிக்கப்பட்ட கட்டண சேனல்கள் மற்றும் தொகுப்புகளின் விகிதங்களில் திருத்தம் காரணமாக, தங்கள் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளில் புதிய கட்டணங்களை அமல்படுத்துவதிலும், நுகர்வோரை ஒட்டுமொத்தமாக புதிய கட்டண முறைக்கு மாற்றுவதிலும் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை பங்குதாரர்கள் எடுத்துரைத்தனர்.

திருத்தப்பட்ட கட்டமைப்பு 2020 ஐ செயல்படுத்துவது தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், முன்னோக்கிய வழியை பரிந்துரைக்கவும், இந்திய ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் அறக்கட்டளை (ஐபிடிஎஃப்), அகில இந்திய டிஜிட்டல் கேபிள் கூட்டமைப்பு (ஏஐடிசிஎஃப்) மற்றும் டிடிஎச் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு டிராய் தலைமையில் அமைக்கப்பட்டது.

திருத்தப்பட்ட கட்டமைப்பு 2020 தொடர்பான பல பிரச்சினைகளை குழு பரிசீலனைக்கு பட்டியலிடப்பட்டது. எவ்வாறாயினும், திருத்தப்பட்ட கட்டமைப்பு 2020 ஐ சுமூகமாக செயல்படுத்துவதற்கு தடைகளை உருவாக்கக்கூடிய முக்கியமான சிக்கல்களை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு பங்குதாரர்கள் டிராய்-ஐ கேட்டுக்கொண்டனர்.

 

பங்குதாரர்கள் குழுவால் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக; திருத்தப்பட்ட கட்டமைப்பு 2020 ஐ முழுமையாக செயல்படுத்த நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குறித்து பங்குதாரர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக டிராய் 7 மே 2022 அன்று "ஒளிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளுக்கான புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பு தொடர்பான பிரச்சினைகள்" குறித்த ஆலோசனை அறிக்கையை வெளியிட்டது.

முறையான ஆலோசனை செயல்முறைக்குப் பிறகு, டிராய், 22 நவம்பர்2022 அன்று, தொலைத்தொடர்பு (ஒளிபரப்பு மற்றும் கேபிள்) சேவைகள் (எட்டாவது) (முகவரியிடக்கூடிய அமைப்புகள்) கட்டண (மூன்றாவது திருத்தம்) ஆணை, 2022 மற்றும் தொலைத்தொடர்பு (ஒளிபரப்பு மற்றும் கேபிள்) சேவைகள் இன்டர்கனெக்ஷன் (முகவரியிடக்கூடிய அமைப்புகள்) (நான்காவது திருத்தம்) ஒழுங்குமுறைகள், 2022 ஆகியவற்றை அறிவித்தது, இது பின்வரும் சிக்கல்களை உள்ளடக்கியது:

டிவி சேனல்களின் எம்.ஆர்.பி.யில் தொடரும் சகிப்புத்தன்மை

சேனல் தொகுப்பில்  சேர்ப்பதற்கான டிவி சேனல் விலையின் எம்ஆர்பி மீது உச்சவரம்பு ரூ.19/-

சேனல் தொகுப்பு உருவாக்கும் போது தனிப்பட்ட சேனல்களின் விலையின் தொகையில் 45% தள்ளுபடி

சேனல் தொகுப்புகளுக்கும் ஒளிபரப்பாளரால் 15% கூடுதல் சலுகைகள் அனுமதிக்கப்படும்.

மேலும் பல விவகாரங்களை டிராய் பரிசீலனைக்கு பங்குதாரர்கள் குழு பட்டியலிட்டுள்ளது. கூடுதலாக, ஒளிபரப்பாளர்கள், எம்.எஸ்.ஓக்கள், டி.டி.எச் ஆபரேட்டர்கள் மற்றும் எல்.சி.ஓக்களின் பிரதிநிதிகளுடன் ஆணையம் பல கூட்டங்களை நடத்தியது. இச்சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டன. பல்வேறு தரப்பினர் அளித்த சில ஆலோசனைகளை டிராய் பரிசீலித்துள்ளது.

 

பங்குதாரர்களின் குழுவால் அடையாளம் காணப்பட்டு, பிற பங்குதாரர்களால் பரிந்துரைக்கப்பட்டபடி, ஒளிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளின் கட்டணம், இன்டர்கனெக்ஷன் மற்றும் சேவையின் தரம் தொடர்பான மீதமுள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக, பங்குதாரர்களின் கருத்துக்களைக் கேட்பதற்காக ஆணையம் இந்த ஆலோசனை அறிக்கையை வெளியிடுகிறது. 2023 செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் ஆலோசனை அறிக்கை குறித்த எழுத்துப்பூர்வ கருத்துகள் பங்குதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. மறுமொழிகள் இருப்பின், 19செப்டம்பர் 2023 க்குள் சமர்ப்பிக்கலாம். கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளை மின்னஞ்சல் ஐடி advbcs-2@trai.gov.in மற்றும் jtadvbcs-1@trai.gov.in மின்னணு வடிவில் அனுப்பலாம்

ஏதேனும் விளக்கம்/ தகவல்களுக்கு ஆலோசகர் (பி & சிஎஸ்) திரு அனில் குமார் பரத்வாஜை தொலைபேசி எண் +91-11-23237922 இல் தொடர்பு கொள்ளலாம்.

***



(Release ID: 1946881) Visitor Counter : 91