தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

ஜிசாட்-24 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது - தற்சார்பு இந்தியாவை நோக்கிய மேலும் ஒரு முன்னேற்றம்: தகவல், ஒலிபரப்புத்துறை செயலாளர் அபூர்வா சந்திரா

Posted On: 07 AUG 2023 6:54PM by PIB Chennai

நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்.எஸ்..எல்) டாடா பிளே-யுடன் இணைந்து ஜிசாட் -24 செயற்கைக்கோளை ஜூன் 2022 இல் விண்ணில் செலுத்தியது. தற்போது சுற்றுப்பாதையில் உள்ள இந்த செயற்கைக்கோளின் பயன்பாட்டை டாடா ப்ளே இன்று முதல் தொடங்கியது.

 

இதன் தொடக்க விழா தில்லியில் உள்ள டாடா பிளே -யின் ஒலிபரப்பு மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய தகவல், ஒலிபரப்புத் துறை செயலாளர் திரு அபூர்வா சந்திரா, ஜிசாட் -24- வெற்றிகரமாக செயல்படுத்திய விண்வெளித் துறை , டாடா பிளே ஆகியவற்றுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்இந்த நிகழ்வு தற்சார்பு இந்தியா, விண்வெளி மற்றும் தகவல் தொடர்புத் துறையில் தற்சார்பு ஆகியவற்றை நோக்கி மேலும் ஒரு படி முன்னேற்றமாகும் என்றும் அவர் கூறினார்.

 

தற்போது டாடா பிளே-யில் 600 அலைவரிசைகள் உள்ளன. இஸ்ரோ செயற்கைக்கோளை இணைப்பதன் மூலம், பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் 900 அலைவரிசைகளை  அனுப்ப முடியும். டாடா பிளேயுடன் இணைந்து முதல் முறையாக தேவை அடிப்படையிலான செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய என்.எஸ்..எல் நிறுவனத்தைத் தனியார்மயமாக்கி நிறுவிய பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின் உச்சகட்டம் இது. இந்த அலைவரிசைகள் இப்போது மலைப்பாங்கான வடகிழக்கு மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் உட்பட நாடு முழுவதும் கிடைக்கும்" என்று செயலாளர் மேலும் கூறினார்.

 

இது குறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத்  கூறுகையில், "டிடிஎச் சேவைகளை வழங்குவதற்காக இஸ்ரோ உருவாக்கிய 4 டன் எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-24, முழுமையான சுற்றுப்பாதை சோதனைக்குப் பிறகு அதன் அதிகபட்ச செயற்கைக்கோள் திறனில் முழுமையாக செயல்படுகிறது. அதிநவீன உள்நாட்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் ஒரு புரட்சியை இந்த மகத்தான சாதனை குறிக்கிறது. இது நமது நாட்டின் வான்வெளி ஆற்றலுக்கான பெருமையாக செயல்படுகிறது மற்றும் டிமாண்ட் டிரைவ் மிஷன் பிரிவில் இந்தியாவின் வெற்றிகரமான நுழைவை முன்னறிவிக்கிறதுஎன்றார்.

**** 

ANU/SM/SMB/KRS



(Release ID: 1946534) Visitor Counter : 146