நிலக்கரி அமைச்சகம்
2023 ஜூன் வரை நிலக்கரி உற்பத்தி 8.51% அதிகரிப்பு
Posted On:
07 AUG 2023 3:50PM by PIB Chennai
நிலக்கரி சுரங்கங்களை மூடுவதால் நிலக்கரி நிறுவனங்களின் (இந்திய நிலக்கரி நிறுவனம் / சிங்கரேனி நிலக்கரி நிறுவனம்) சேவைகளில் இருந்து எந்தவொரு தொழிலாளியும் பணிநீக்கம் செய்யப்படுவதில்லை. போதுமான பயிற்சியை வழங்குவதன் மூலம், தொழிலாளர்கள் திறம்பட பயன்படுத்துவதற்காக வேறு அலகுகள்/ நிறுவனங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார்கள்/ மாற்றப்படுகிறார்கள்.
நாட்டின் பெரும்பாலான நிலக்கரித் தேவை உள்நாட்டு உற்பத்தி / விநியோகம் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதிலும், நாட்டில் அத்தியாவசியமற்ற நிலக்கரி இறக்குமதியை தவிர்ப்பதிலும் அரசு கவனம் செலுத்துகிறது. 2022-23 ஆம் ஆண்டில், நிலக்கரி உற்பத்தி முந்தைய ஆண்டை விட 14.77% அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில், ஜூன், 2023 வரை, உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 8.51 சதவீதம் அதிகரித்துள்ளது. நிலக்கரி உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்ய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பின்வருமாறு:
- நிலக்கரி சுரங்கங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்த நிலக்கரி அமைச்சகத்தின் வழக்கமான ஆய்வுகள்.
- சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2021 ஐ இயற்றுதல், சுரங்க உரிமையாளர்கள் (அணுக் கனிமங்கள் தவிர) தங்கள் வருடாந்திர கனிம உற்பத்தியில் (நிலக்கரி உட்பட) 50% வரை சுரங்கத்துடன் இணைக்கப்பட்ட இறுதி பயன்பாட்டு ஆலையின் தேவையை பூர்த்தி செய்த பின்னர் வெளிச் சந்தையில் விற்பனை செய்ய ஏதுவாகும்.
- நிலக்கரி சுரங்கங்களின் செயல்பாட்டை விரைவுபடுத்த நிலக்கரித் துறைக்கான ஒற்றைச் சாளர அனுமதிக்கான இணையதளம்.
- நிலக்கரிச் சுரங்கங்களை விரைவாகச் செயல்படுத்துவதற்கு பல்வேறு ஒப்புதல்கள்/ அனுமதிகளைப் பெறுவதற்காக நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டாளர்களைக் கையிலெடுப்பதற்கான திட்டக் கண்காணிப்பு அலகு.
இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 1946387)
ANU/AP/IR/RR/KPG
(Release ID: 1946501)
Visitor Counter : 162