வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

எனது வாழ்க்கை, எனது தூய்மை நகர இயக்கம்

Posted On: 07 AUG 2023 12:58PM by PIB Chennai

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்துடன் இணைந்து 2023 மே 15 ஆம் தேதி, 3 வார கால இயக்கத்தைத் தொடங்கியது. எனது வாழ்க்கை, எனது தூய்மை நகர இயக்கம் ('மேரி லைஃப் மேரா ஸ்வச் ஷெஹர்') என்ற இந்த இயக்கம் உலக சுற்றுச்சூழல் தினமான 2023 ஜூன் 5அன்று நிறைவடைந்தது. குப்பைகளை குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி (ஆர்.ஆர்.ஆர்) மையங்களை அமைக்க நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு (யு.எல்.பி) அதிகாரம் அளிப்பதில் இந்த இயக்கம் கவனம் செலுத்தியது. பயன்படுத்தப்படாத அல்லது பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், ஆடைகள், காலணிகள், புத்தகங்கள் மற்றும் பொம்மைகளை சேகரிப்பது குறித்து இந்த இயக்கத்தில் கவனம் செலுத்தப்பட்டது. குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி (ஆர்.ஆர்.ஆர்) மையங்களின் மாநில வாரியான விவரங்களை http://sbmurban.org/rrr-centers என்ற தளத்தில் காணலாம்.

எனது வாழ்க்கை, எனது தூய்மை நகரம் என்பது ஒரு திட்டம் அல்ல. இது நகர்ப்புறத் தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் செயல்படுத்தப்பட்ட மக்கள் தொடர்பு மற்றும் பொதுமக்கள்  ஈடுபாட்டு இயக்கமாகும்.

சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும், கழிவுகளை குறைப்பதற்கும், வளப் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கும், தங்கள் அன்றாட வாழ்க்கையில் 'குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி' (ஆர்.ஆர்.ஆர்) நடைமுறைகளை பின்பற்றுவதற்கும், மக்கள் மத்தியில் மாற்றத்தை ஊக்குவிப்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, வீடு வீடாக விழிப்புணர்வு பிரச்சார இயக்கங்கள், சமூக ஊடகப் பிரச்சாரங்கள் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரச்சார வழிகாட்டுதல்களையும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டது, அவற்றை http://sbmurban.org/storage/app/media/ Meri-LiFE-Mera-Swachh-Shehar-SOP-for-States-and-Cities-12th-May-2023.pdf என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

இத்தகவலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு கௌஷல் கிஷோர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***

ANU/AP/PLM/AG/RR

(Release ID: 1946306)



(Release ID: 1946357) Visitor Counter : 131