பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட, வட இந்தியாவின் முதல் நதி மறுசீரமைப்புத் திட்டம் தேவிகா முடிவடையும் தருவாயில் உள்ளது: டாக்டர். ஜிதேந்திர சிங்

Posted On: 06 AUG 2023 4:24PM by PIB Chennai

ரூ.190 கோடி மதிப்பீட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட, வட இந்தியாவின் முதல் நதி மறுசீரமைப்பு திட்டம் தேவிகா முடிவடையும் தருவாயில் உள்ளது என்று  மத்திய) அறிவியல் & தொழில்நுட்பம்; பிரதமர் அலுவலகம், பணியாளர், பொது குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார். உதம்பூரில் உள்ள புனித தேவிகா நதியின் புனிதத்தைப் பாதுகாக்க தனியாக மேற்கொள்ளப்பட்ட திரவக் கழிவு மேலாண்மைத் திட்டத்தை ஆய்வு  செய்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

 

ஆய்வுக் கூட்டத்தின் போது,  புனிதமான கங்கை நதியின் சகோதரியாகக் கருதப்படும் தேவிகா, மத முக்கியத்துவம் வாய்ந்தது, அதனால்தான் தேவிகா புத்துயிர் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளையும் இணைக்கும் குழாய்கள் மற்றும் மேன்ஹோல்களின் நெட்வொர்க்குடன் திரவக் கழிவு மேலாண்மை திட்டம்  மூலம் கட்டப்படுகிறது. அதன் புனிதத்தை பாதுகாக்க. திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 190 கோடி நிதியில், ஒதுக்கீடு பகிர்வு முறையே 90:10 என்ற விகிதத்தில் மத்திய அரசும், யூனியன் பிரதேசமும் செய்து கொண்டிருப்பதாக  டாக்டர். ஜிதேந்திர சிங்  கூறினார்.

சமூகத்தின் அடிமட்டத்தின் பிரதிநிதிகளாக இருக்கும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் பங்கு முக்கிய வளர்ச்சித் திட்டங்களின் வெற்றிக்கு இன்றியமையாதது என்று ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். இந்த சந்திப்பின் போது கலந்து கொண்ட பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகள்  அமைச்சரிடம் பல பிரச்சனைகளை எழுப்பினர்.அதற்கு அமைச்சர் அவர்கள் இயன்றளவு குறுகிய காலத்தில் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு துறைகளுக்கு உத்தரவிட்டார்.

***

SM/PKV/DL


(Release ID: 1946223) Visitor Counter : 196