பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு எதிராக, சிபிஐ 135 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது மத்திய இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங்
Posted On:
03 AUG 2023 10:57AM by PIB Chennai
2018, 2019, 2020, 2021, 2022 மற்றும் 2023 (30.06.2023 வரை) ஆகிய கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு சிவில் சர்வீஸ் அதிகாரிகள் மீது சிபிஐ 135 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இவை வழக்கமான வழக்குகள் மற்றும் ஆரம்பகட்ட விசாரணை நிலை வழக்குகள் ஆகும்.
இந்த 135 வழக்குகளில், 57 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் 5 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் (அதாவது, 2018 முதல் 2022 வரை), மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் முதல் கட்ட பரிந்துரையின்படி 12,756 அதிகாரிகள் மீதும், இரண்டாம் கட்ட பரிந்துரையின்படி 887 அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில், 719 அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்க அறிவுறுத்தப்பட்டது.
இந்தத் தகவலை மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
****
SM/PLM/KRS
(Release ID: 1945642)
Visitor Counter : 124