உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

ட்ரோன் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்காக 63 ரிமோட் பைலட் பயிற்சி நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அங்கீகாரம் அளித்துள்ளது

Posted On: 03 AUG 2023 1:01PM by PIB Chennai

ஜூலை 25, 2023 நிலவரப்படி நாட்டில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 63 ரிமோட் பைலட் பயிற்சி நிறுவனங்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் தொடர்பான பயிற்சி நிறுவனங்கள் உள்ளன.

இந்தியாவில் ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் உதிரிபாகங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் உதிரிபாகங்களுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகைத் திட்டத்தை (பி.எல்.ஐ) அரசு அறிவித்துள்ளது. ட்ரோன்களை பரவலாகப் பயன்படுத்துவதற்கு வசதியாக ட்ரோன் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

தளர்த்தப்பட்ட ட்ரோன் விதிகள்- 2021, பி.எல்.ஐ திட்டம், ட்ரோன் இறக்குமதி தடை மற்றும் அதிகரித்து வரும் பயன்பாடு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நன்மைகளைக் கருத்தில் கொண்டு, இந்திய ட்ரோன் தொழில்துறை  வளர்கிறது.

ட்ரோன் விதிகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் ட்ரோன் பயிற்சி மற்றும் அது தொடர்பான திறன்களை வழங்குவதற்காக 63 நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மொத்தம் 10010 ட்ரோன்கள் ஒரு தனித்துவமான அடையாள எண்ணுடன் (யுஐஎன்) பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் திரு வி.கே.சிங் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1945332

***



(Release ID: 1945540) Visitor Counter : 149