தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

1957 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்ட திட்டம் மாதாந்திர ஏட்டின் படைப்புகளின் சிறப்பு தொகுப்பான 'யோஜனா கிளாசிக்ஸ்' –ஐ வெளியீட்டு பிரிவு வெளியிட்டுள்ளது

Posted On: 01 AUG 2023 6:09PM by PIB Chennai

மத்திய அரசின் முன்னணி பதிப்பகமான வெளியீட்டு பிரிவு, 1957-ம் ஆண்டு முதல் வெளியான மக்கள் வளர்ச்சி மாத இதழான திட்டத்தில்  பல்வேறு கருப்பொருள் பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின்  தொகுப்புத் தொடரான யோஜனா கிளாசிக்ஸை வெளியிட்டுள்ளது. பல ஆண்டுகளாக இதழில் வெளியிடப்பட்ட உள்ளடக்கத்தின் வசீகரிக்கும் செழுமையுடன் நுணுக்கமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் வாசகர்களை இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் செழுமையான பயணத்திற்கு அழைத்துச் செல்லும். மாணவர்கள், கலை மற்றும் கலாச்சார ஆர்வலர்கள், கல்வியாளர்களுக்கு பயன்படும் ஒரு உன்னதமான தொகுப்பாகும். இந்நூல் விரைவில் பதிப்பகப் பிரிவு புத்தகக் காட்சியகம், சூச்னா பவன் மற்றும் இணையத்தளwww.publicationsdivision.nic.in கிடைக்கும்.

 

தற்போது நடைபெற்று வரும் தில்லி புத்தகக் கண்காட்சி 2023-ல் வெளியீட்டு பிரிவு அரங்குக்கு  வருகை தந்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை செயலாளர் திரு அபூர்வா சந்திரா இந்த புத்தகத்தை வெளியிட்டார். செயலாளருடன் வெளியீடுகள் பிரிவின் தலைமை இயக்குநர் திருமதி அனுபமா பட்நாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

இந்திய கலாச்சார பாரம்பரியம், கலை மற்றும் கட்டிடக்கலை, புகழ்பெற்ற வரலாறு மற்றும் தேசிய தலைவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் இப்பிரிவால் வெளியிடப்பட்ட புத்தகங்களின் வளமான சேகரிப்பு குறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு செயலாளர் தனது பாராட்டை தெரிவித்தார்.

 

இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பும், இந்திய பதிப்பாளர் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் 27-வது தில்லி புத்தகக் கண்காட்சி ஜூலை29-ம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ம் தேதிவரை தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெறுகிறது. பிரகதி மைதானத்தின் அரங்கு எண் 11,  எண் 12 இல் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டு பிரிவு அதன் புத்தகங்கள் மற்றும் இதழ்களை காட்சிப்படுத்தியுள்ளது.

 

பார்வையாளர்கள் இந்த அரங்கில் தேசத்தைக் கட்டியெழுப்புதல், வரலாறு மற்றும் பாரம்பரியம், வாழ்க்கை வரலாறு, குறிப்பு புத்தகங்கள் மற்றும் குழந்தைகள் இலக்கியம் வரை பல்வேறு கருப்பொருள்களில் புத்தகங்களின் நேர்த்தியான தொகுப்பைக் காணலாம். புத்தக ஆர்வலர்கள் குடியரசுத் தலைவர் மாளிகை குறித்த பிரீமியம் புத்தகங்களையும், குடியரசுத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் பிரதமர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளின் தொகுப்பையும் ஆராயலாம், இது வெளியீட்டுப் பிரிவால் பிரத்தியேகமாக வெளியிடப்பட்டுள்ளது.

 

புத்தகங்களைத் தவிர, வெளியீட்டு பிரிவின் பிரபலமான மற்றும் பரவலாக விநியோகிக்கப்படும் பத்திரிகைகளான யோஜனா, குருஷேத்ரா, ஆஜ்கல் மற்றும் பால் பாரதி ஆகியவையும் அரங்கில்  கிடைக்கின்றன. இப்பிரிவினால் வெளியிடப்படும் சஞ்சிகைகள் மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகள் / ரோஜ்கர் சமாச்சார் ஆகியவற்றின் வருடாந்தர சந்தாக்களையும் பார்வையாளர்கள் செலுத்தலாம் .

(Release ID: 1944773)



(Release ID: 1944839) Visitor Counter : 106