பாதுகாப்பு அமைச்சகம்

ராணுவத்தில் பெண்கள்

Posted On: 31 JUL 2023 3:53PM by PIB Chennai

இந்திய ராணுவத்தில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சாராத பெண்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

•     2023,  ஜூலை  01 நிலவரப்படி, இந்திய ராணுவ மருத்துவப்  பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை:

•     ராணுவ மருத்துவப் படை  பணியாளர்கள் (ஏஎம்சி) - 1,212

•     ராணுவ பல் மருத்துவப் பிரிவு பணியாளர்கள் (ஏடிசி) - 168

•     ராணுவ செவிலியர் சேவை (எம்.என்.எஸ்) - 3,841

•     2023, ஜனவரி 01  நிலவரப்படி இந்திய ராணுவத்தில் (ஏஎம்சி, ஏடிசி மற்றும் எம்என்எஸ் நீங்கலாக) மொத்த பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை 1,733 ஆகும்.

இந்திய ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முக்கிய முயற்சிகள் பின்வருமாறு:

•     புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் ஆண்டுக்கு 20 பெண் ராணுவ அதிகாரிகளுக்கான காலியிடங்கள் ஜூலை 2022 முதல் ஒதுக்கப்பட்டுள்ளன.

•     ராணுவ சேவை ஆணையத்தில் பெண்களுக்கான 90 பணியிடங்கள் உள்ளன, இதில் 10 கூடுதல் பணியிடங்கள் ஜூன் 2023 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

•     மார்ச், 2023 முதல், பின்வரும் பிரிவுகளில் பெண் அதிகாரிகளை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது:

•     பீரங்கிப் பிரிவுகள்.

•     குதிரை மற்றும் கால்நடை மருத்துவப் படை.

•     2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ராணுவ விமானப் பிரிவில் பெண் அதிகாரிகள் விமானிகளாக சேர்வது தொடங்கப்பட்டுள்ளது.

•     இந்திய ராணுவத்தின்  காவல்துறையில் பெண்களை இதர பதவிகளில் சேர்ப்பது கடந்த 2019-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இத்தகவலை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு அஜய் பட் இன்று மாநிலங்களவையில் திரு பி. சந்தோஷ் குமாரின்  கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

*****

(Release ID: 1944285)

ANU/AP/SMB/AG



(Release ID: 1944364) Visitor Counter : 341