பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜூலை 29 அன்று அகில இந்திய கல்வி மாநாட்டை பிரதமர் தொடங்கிவைக்கிறார்

இந்த இரண்டுநாள் மாநாடு தேசிய கல்விக்கொள்கை 2020 தொடங்கப்பட்டதன் 3-ம் ஆண்டுடன் இணைகிறது

பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் முதலாவது தவணை நிதியை பிரதமர் விடுவிப்பார்

12 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட கல்வி மற்றும் திறன் தொடர்பான பாட நூல்களைப் பிரதமர் வெளியிடுவார்

Posted On: 28 JUL 2023 6:45PM by PIB Chennai

தில்லியில், பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் அகில இந்திய கல்வி மாநாட்டை ஜூலை 29 அன்று காலை 10 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைப்பார். இது தேசிய கல்விக்கொள்கை 2020 தொடங்கப்பட்டதன் 3-ம் ஆண்டுடன் இணைகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் முதலாவது தவணை நிதியை பிரதமர் விடுவிப்பார். இந்தப்பள்ளிகள், தேசிய கல்விக் கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டிருப்பது போல் சமத்துவமான, அனைவரையும் உள்ளடக்கிய, பன்மைத்துவ சமூகத்தை கட்டமைப்பதற்கு பங்களிப்பு செய்யும் குடிமக்களாக மாணவர்களை வளர்த்தெடுக்கும். 12 இந்திய மொழிகளில்  மொழிபெயர்க்கப்பட்ட கல்வி மற்றும் திறன் தொடர்பான பாட நூல்களையும் பிரதமர் வெளியிடுவார்.

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கை 2020, அமிர்த காலத்தில் நாட்டை தலைமை தாங்குவதற்கான இளைஞர்களை வளர்த்து உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. அடிப்படை மனித மாண்புகளை அவர்களுக்கு பயிற்றுவிப்பதுடன் எதிர்காலத்தின் சவால்களை சந்திக்கும் வகையில் அவர்களை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும்கடந்த 3 ஆண்டுகளில்  இந்த கொள்கையின் அமலாக்கம்  பள்ளி, உயர்கல்வி மற்றும் திறன்கல்வியில் முற்போக்கான மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. ஜூலை 29,30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள 2 நாள் நிகழ்ச்சி கல்வியாளர்கள், துறைசார்ந்த நிபுணர்கள், கொள்கை வகுப்பவர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் ஆகியோரும் பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள், திறன்மேம்பாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த  ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் தேசிய கல்விக்கொள்கை 2020 பற்றிய தங்களின் எண்ணங்களை அமலாக்கத்தின்  வெற்றிக்கதைகளை, நடைமுறைகளை பகிர்ந்துகொள்ள ஒரு தளத்தை வழங்கும்.

அகில இந்திய கல்வி மாநாட்டில் தரமான கல்வி மற்றும் நிர்வாகத்தை எளிதாக பெறுதல், சமமான அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, சமூகப் பொருளாதார ரீதியில் பயன்பெறாத பிரிவினரின் பிரச்சனைகள், தரவரிசை கட்டமைப்பில் தேசிய கல்வி நிறுவனம், இந்திய அறிவுமுறை, கல்வியை சர்வதேச மயமாக்குதல் உட்பட 16 அமர்வுகளில் விவாதங்கள் நடைபெறும்.

***

(Release ID: 1943781)

LK/SMB/AG/KRS


(Release ID: 1943832) Visitor Counter : 151