மத்திய பணியாளர் தேர்வாணையம்
ஜூலை2, 2023 அன்று நடந்த உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் (ஏபிஎஃப்சி)தேர்வில் நாசவேலை நடந்ததாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளுக்கு யுபிஎஸ்சி மறுப்பு
प्रविष्टि तिथि:
28 JUL 2023 2:55PM by PIB Chennai
2023 ஜூலை 2ஆம்தேதி மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் (ஏபிஎஃப்சி) தேர்வில் முறைகேடு நடந்ததாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. தேர்வு முடிந்த பிறகு வினாத்தாள்களின் சில படங்கள் பல்வேறு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதற்குள், தேர்வு எழுதிய அனைத்து தேர்வர்களின் கைகளிலும் லட்சக்கணக்கான வினாத்தாள்கள் இருந்தன.தேர்வாணையமும், இணையதளத்தில் வினாத்தாளை பதிவேற்றம் செய்தது. எனவே, அத்தகைய தகவல்கள் நம்பகமானவையோ அல்லது நடவடிக்கை எடுக்கக்கூடியவையோ அல்ல.
இருப்பினும், ஆணையம் இந்த நிகழ்வைக் குறிப்பிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மையங்களிலும் தேர்வின் செயல்முறைகள் மற்றும் சோதனைகளை முழுமையாக ஆய்வு செய்தது. சந்தேகத்துக்குரிய எதுவும் கிடைக்கவில்லை. மேலும், மிகுந்த எச்சரிக்கையுடன், ஏதேனும் அசாதாரண போக்கைக் கண்டறிய தகுதிப் பட்டியலின் அனைத்து மட்டங்களிலும் தேர்வு முடிவுகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்தது. ஒவ்வொரு நிலையிலும் தகுதியான மற்றும் தகுதியற்ற விண்ணப்பதாரர்களின் தகுதி நிலைகள் ஒழுங்காகவும், தேர்வாளர்களின் செயல்திறனுக்கு ஏற்பவும் இருப்பது தெளிவாகக் காணப்பட்டது.
சில மையங்களில் இருந்து அதிக விண்ணப்பதாரர்கள் தகுதி பெறுவதைப் பொறுத்தவரை, திறந்த போட்டிகளில் இது அசாதாரணமானது அல்ல என்று கூறப்படுகிறது. எந்த இரண்டு தேர்வுகளையும் சார்பு அடிப்படையில் ஒப்பிட முடியாது, வெவ்வேறு ஆண்டுகளில் ஒரே தேர்வு கூட வெவ்வேறு தரவுகளை வழங்குகிறது.
நிகழ்வுகள் மற்றும் தரவுகளின் விரிவான மற்றும் முழுமையான பகுப்பாய்வின் அடிப்படையில், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் ஆதாரமற்றவை மற்றும் தகுதியற்றவை என்று ஆணையம் உறுதியாகக் கருதுகிறது.
----
ANU/PKV/KPG
(रिलीज़ आईडी: 1943743)
आगंतुक पटल : 203