கூட்டுறவு அமைச்சகம்

மக்களவையில் இன்று நடைபெற்ற பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா 2022 மீதான விவாதத்திற்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் பதிலளித்தார்- விவாதத்திற்கு பிறகு மக்களவை இந்த மசோதாவை நிறைவேற்றியது

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பல மாநில கூட்டுறவு சங்கங்களின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை மற்றும் லாபத்தை அதிகரிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மசோதா இந்த அவையில் நிறைவேற்றப்பட்டதன் மூலம், நாட்டின் கூட்டுறவு இயக்கத்தில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கும்.

தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை புதுப்பிக்கவும், அவற்றை சாத்தியமானதாக்கவும் மற்றும் பல பரிமாணங்கள் கொண்டதாக மாற்றவும் மோடி அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

உறுப்பினர்களின் தேர்வுக்கான செயல்முறையை சீர்திருத்துதல், சங்கத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருதல், கண்காணிப்பு முறையை வலுப்படுத்துதல் மற்றும் வர்த்தகத்தை எளிதாக்குதல் போன்ற விவகாரங்களுக்கான விரிவான ஏற்பாடுகள் மசோதாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குழுக்களில் பட்டியலினத்தவர் ஒருவர், அல்லது பழங்குடியினர் மற்றும் பெண் ஒருவருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஏற்பாடு இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டிருப்பது, இந்த பிரிவுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும்.

பணியாளர்களை நியமிக்கும் செயல்முறையில் வெளிப்பட

Posted On: 25 JUL 2023 7:59PM by PIB Chennai

மக்களவையில் இன்று நடைபெற்ற பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா 2022 மீதான விவாதத்திற்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா பதிலளித்தார். விவாதத்திற்குப் பிறகு மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்த கூட்டுறவுத் துறை அமைச்சர், பல மாநில கூட்டுறவு சங்கங்களில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை மற்றும் லாபத்தை அதிகரிக்கும் வகையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில், இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றார். இந்த மசோதாவில், நியாயமான தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் சீர்திருத்தங்களை செயல்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தைப் போலவே இந்த ஆணையமும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்றும், இதில் அரசின் தலையீடு இருக்காது என்றும் அவர் கூறினார். மேலும், ஆணையத்தில் மூன்றில் ஒரு பங்கு காலியிடங்கள் ஏற்பட்டால், காலியாக உள்ள பதவிகளுக்கு மீண்டும் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்துடன், ஆணையக் கூட்டங்களில் நெறிமுறை மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் சுமூகமாக இயங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குழுக்களின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 3 மாதங்களுக்குள் ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டும் . கூட்டுறவு சங்க நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் வகையில், பங்குதாரர்களுக்கு பெரும்பான்மை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

குழுக்களில் பட்டியலினத்தவர் ஒருவர், அல்லது பழங்குடியினர் மற்றும்  பெண் ஒருவருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஏற்பாடு இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டிருப்பது, இந்த பிரிவுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும். பல்வேறு அரசியலமைப்புத் தேவைகளுக்கு இணங்காவிட்டால் ஆணைய உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்று அவர் கூறினார். ஊழியர்களின் ஆட்சேர்ப்பு நடைமுறையில், ரத்த உறவு அல்லது தூரத்து உறவில் யாருக்கும் வேலை வழங்கப்படாது என்று திரு. ஷா கூறினார். இந்த மசோதாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த மசோதா அவையில் நிறைவேற்றப்பட்டதன் மூலம், நாட்டின் கூட்டுறவு இயக்கத்தில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் கூட்டுறவு அமைச்சர் தெரிவித்தார். பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான கூட்டுறவு அமைச்சகம் நாட்டில் கூட்டுறவுகளை வலுப்படுத்த எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் மத்திய கூட்டுறவு அமைச்சர் மக்களவையில் தெரிவித்தார். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, நாட்டில் கூட்டுறவுத் துறையுடன் தொடர்புடைய அனைத்து மக்களும் கூட்டுறவு சங்கங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், தனியாக கூட்டுறவு அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் என்றும் விரும்பினர். இந்த பல தசாப்த கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பிரதமர் மோடி தனியொரு கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கினார் என்று திரு. ஷா கூறினார்.

இந்தியாவில் கூட்டுறவு சங்கம் சுமார் 115 ஆண்டுகள் பழமையானது என்றும், இந்த சங்கம் அமுல், கிரிஷக் பாரதி கூட்டுறவு லிமிடெட் (கிரிப்கோ), இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (இப்கோ) போன்ற பல முக்கியமான நிறுவனங்களை நாட்டிற்கு வழங்கியுள்ளது என்றும், அவை இன்று லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு ஆதாரமாக உள்ளன என்றும் திரு. அமித் ஷா கூறினார். கடந்த 75 ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்கள் குறித்து எந்த கவனமும் செலுத்தப்படவில்லை என்றும், தேசிய அளவிலோ அல்லது மாநில அளவிலோ நாட்டின் நாடாளுமன்றத்தில் இது குறித்து எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார். கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்ட அடுத்த 25 ஆண்டுகளில், நாட்டின் வளர்ச்சிக்கு கூட்டுறவுத் துறை மீண்டும் வலுவான பங்களிப்பை வழங்கும் என்று திரு. ஷா கூறினார்.

திரு மோடியின் தலைமையின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் கூட்டுறவுத் துறையில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று மத்திய கூட்டுறவு அமைச்சர் கூறினார். தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை புதுப்பிக்கவும், அவற்றை சாத்தியமானதாக்கவும் மற்றும் பல பரிமாணங்கள் கொண்டதாக மாற்றவும் மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று அவர் கூறினார். நாடு முழுவதும் 63,000 தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை கணினிமயமாக்கும் பணியை பிரதமர் மோடி ரூ.2500 கோடி செலவில் மேற்கொண்டார். இதன் மூலம் மாவட்ட கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் நபார்டு வங்கியுடன் தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் இணைக்கப்படும். கணினிமயமாக்கலுக்குப் பிறகு, தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களின் தணிக்கை நடவடிக்கை முற்றிலும் ஆன்லைனில் இருக்கும் என்றும், அவர்கள் பல வகையான வர்த்தகங்களைச் செய்ய முடியும் என்றும் திரு. ஷா கூறினார். மோடி அரசு தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களுக்கான மாதிரி துணை விதிகளை உருவாக்கி அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியதாகவும், மேற்கு வங்கம் மற்றும் கேரளாவைத் தவிர, அனைத்து மாநிலங்களும் அவற்றை ஏற்றுக்கொண்டுள்ளன என்றும், இன்று நாடு முழுவதும் தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் இதே போன்ற சட்டத்தின் கீழ் இயங்குகிறது என்றும் அவர் கூறினார். தற்போது தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பணிகளையும் செய்ய முடியும் என்றும், 1100 தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் ஏற்கனவே உழவன் உற்பத்தியாளர் நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் திரு. ஷா கூறினார்.

திரு மோடி நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு எரிவாயு இணைப்புகளை வழங்கியுள்ளார். தற்போது தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் எல்பிஜி விநியோகப் பணியையும் செய்ய முடியும் என்று திரு. அமித் ஷா கூறினார். அதே போல், திரு. மோடி நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு இலவச உணவு தானியங்களை வழங்குகிறார். தற்போது தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் சில்லறை விற்பனை நிலையங்களாகவும் செயல்பட முடியும். தற்போது தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் மக்கள் மருந்தக மையங்களை நடத்தவும், தண்ணீர் கமிட்டியாக செயல்படுவதன் மூலம் நீர் விநியோக பணிகளைச் செய்யவும் முடியும். திரு மோடி தொடக்க வேளாண் கடன் சங்கங்களை சேமிப்பு அமைப்புடன் இணைத்துள்ளார். தற்போது அவை சேமிப்பிலும் ஈடுபடும் என்று அவர் கூறினார். இந்த பட்ஜெட்டில், திரு மோடி பல ஆண்டுகளாக கூட்டுறவுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை முடிவுக்குக் கொண்டு வந்து, கூட்டுறவு மற்றும் பெரு நிறுவன வரிகளை சமமாக கொண்டு வந்துள்ளார் என்று திரு. ஷா தெரிவித்தார். மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா மற்றும் உத்தரபிரதேச விவசாயிகள் தங்கள் கரும்பை கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு விற்கிறார்கள். ஆனால் இதற்கு 30 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் லாபத்தின் மீதான வரியை முற்றிலுமாக மோடி ரத்து செய்துவிட்டார் என்றும், இது மட்டுமல்லாமல், முன்பு செலுத்திய வரியைத் திருப்பித் தரவும் அவர் ஏற்பாடு செய்துள்ளார் என்று அவர் கூறினார்.

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கூறுகையில், கூட்டுறவுகளை வலுப்படுத்த 3 புதிய பல மாநில சங்கங்களை உருவாக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. முதல் சங்கம் விவசாயிகளின் விளைபொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான தளமாக செயல்படும். இரண்டாவது சங்கம் சிறு விவசாயிகளை விதை உற்பத்தியுடன் இணைக்கும், இதன் மூலம் 1 ஏக்கர் நிலம் கொண்ட விவசாயிகளும் விதை உற்பத்தியுடன் இணைய முடியும். மூன்றாவது சங்கம் விவசாயிகளின் கரிம விளைபொருட்களை நாடு மற்றும் உலகம் முழுவதும் சந்தைப்படுத்துவதன் மூலம் அவர்களின் விளைபொருட்களுக்கு நியாயமான விலையை வழங்கும். இது தவிர, வரும் நாட்களில் கூட்டுறவு கல்விக்காக கூட்டுறவு பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார் என்று திரு. ஷா கூறினார். தேசிய கூட்டுறவு தரவுத்தளம் பிரதமர் திரு. நரேந்திர மோடியால் விரைவில் தொடங்கப்பட உள்ளது. 2003 மற்றும் 2020ம் ஆண்டுகளுக்கு இடையே நாட்டில் ஒருபோதும் தேசிய கூட்டுறவு கொள்கை இருந்ததில்லை. ஆனால் திரு. மோடியின் தலைமையில், இந்தாண்டு தீபாவளிக்கு முன்பு, அடுத்த 25 ஆண்டுகளுக்கு கூட்டுறவுகளின் திட்டத்தை நாட்டின் முன் வைக்கும் புதிய தேசிய கூட்டுறவு கொள்கை உருவாக்கப்படும் என்று அவர் கூறினார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி கடந்த 9 ஆண்டுகளில் நாட்டின் கோடிக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து விடுவிக்க பாடுபட்டுள்ளார் என்று திரு. அமித் ஷா கூறினார் . நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான ஒரே வழி விவசாயம் மற்றும் கூட்டுறவு மட்டுமே என்றும், இதற்காக, பிரதமர் தனியொரு கூட்டுறவு அமைச்சகத்தை அமைத்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

உறுப்பினர்களின் தேர்வுக்கான செயல்முறையை சீர்திருத்துதல், சங்கத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருதல், கண்காணிப்பு முறையை வலுப்படுத்துதல் மற்றும் வர்த்தகத்தை எளிதாக்குதல் போன்ற விவகாரங்களுக்கான விரிவான ஏற்பாடுகள் மசோதாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சங்க உறுப்பினர்களிடையே நெறிமுறை மற்றும் தொழில்முறை, இயக்குநர் குழுவில் நலிவடைந்த மற்றும் கடைநிலை பிரிவினரின் பிரதிநிதித்துவம் குறித்து மசோதாவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பணியாளர்களை நியமிக்கும் செயல்முறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவது, மத்திய பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்ட குழுவிலிருந்து தணிக்கையாளர்களை நியமிப்பது மற்றும் தணிக்கை மற்றும் கணக்குகளின் பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகள் மூலம் நிதி நெறிகளைக் கொண்டு வருவது போன்ற விவகாரங்கள் தொடர்பான விதிகளும் இந்த மசோதாவில் செய்யப்பட்டு உள்ளன.

இந்த மசோதாவில், ஒரே நேரத்தில் தணிக்கை மூலம் உடனடி திருத்த நடவடிக்கை, சங்கத்தின் மோசடி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் மத்திய பதிவாளரின் நெறிமுறைக்கு இணங்குதல், அதன் உருவாக்கம், செயல்பாடு மற்றும் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்தல் ஆகியவை வலியுறுத்தப்பட்டுள்ளன. வர்த்தகத்தை எளிதாக்குவதை உறுதி செய்வதற்காக, பதிவு நடைமுறைகளில் திருத்தம், விண்ணப்பங்களுக்கு விரைவாக தீர்வு காண்பது மற்றும் விண்ணப்பங்கள், ஆவணங்களை மின்னணு முறையில் சமர்ப்பித்தல் மற்றும் அவற்றின் பரிசீலனை போன்றவற்றிற்கான ஏற்பாடுகளும் இந்த மசோதாவில் செய்யப்பட்டு உள்ளன.

அரசின் முன்அனுமதியுடன் அரசு பங்குகளை மீட்கவும், பல மாநில கூட்டுறவு சங்கங்களுக்கு விசாரணை நடத்த வாய்ப்பளித்த பின் அவற்றை கலைக்கவும் மற்றும் வங்கிகள் மீது வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949-ஐ அமல்படுத்தவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது .

** 

Release ID:: 1942586)



(Release ID: 1943071) Visitor Counter : 192