பாதுகாப்பு அமைச்சகம்

1999-ம் ஆண்டு கார்கில் போர் வீரர்களுக்கு 24-வது கார்கில் வெற்றிதினத்தன்று நாடு அஞ்சலி செலுத்துகிறது. திராஸில் உள்ள கார்கில் போர் நினைவுச்சின்னத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் மரியாதை செலுத்தினார்

Posted On: 26 JUL 2023 1:14PM by PIB Chennai

1999-ம் ஆண்டு கார்கில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஜூலை 26 ம் தேதி கார்கில் வெற்றி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளைக் குறிக்கும் வகையில், பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று லடாக்கின் திராஸில் உள்ள கார்கில் போர் நினைவுச் சின்னத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

திராஸில் நடந்த விழாவில் போர் வீரர்கள், மறைந்த வீரர்களின் மனைவிகள், மற்றும் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அவர்களுடன் உரையாடிய ராஜ்நாத் சிங், நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூர்ந்து மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இந்த மாவீரர்களின் தியாகங்கள் ஒருபோதும் மறக்கப்படாது என்று அவர் அவர்களுக்கு உறுதியளித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர், ஆயுதப்படைகளின் வீரத்தையும், அர்ப்பணிப்பையும் பாராட்டினார், இது நெருக்கடி காலங்களில் நாடு தலைநிமிர்ந்து நிற்க  மீண்டும் உதவியது. வீரர்களின் தியாகத்தின் அடித்தளத்தில்தான் இன்றைய இந்தியா உள்ளது என்றார். 'ஆபரேஷன் விஜய்', மோசமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இந்தியாவின் மன உறுதியையும் வெளிப்படுத்தும் ஒரு அத்தியாயம் என்று திரு ராஜ்நாத் சிங் விவரித்தார். இந்த வெற்றி தேசத்தை வெற்றியின் உச்சங்களை அடைய வழிவகுத்த ஒரு ஏவுதளம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

***

 

ANU/LK/IR/KPG



(Release ID: 1942799) Visitor Counter : 292