குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு அவையில் குடியரசு துணைத் தலைவர் வெளியிட்ட அறிக்கை
प्रविष्टि तिथि:
26 JUL 2023 12:11PM by PIB Chennai
மாண்புமிகு உறுப்பினர்களே, இன்று கார்கில் வெற்றி தினத்தின் இருபத்தி நான்காவது ஆண்டு விழா. 1999-ம் ஆண்டு இதே நாளில், நமது துணிச்சலான வீரர்கள் தங்கள் அசைக்க முடியாத தைரியத்துடனும் உறுதியுடனும் கார்கிலில் நமது எல்லையிலிருந்து ஊடுருவியவர்களை விரட்டியடித்தனர்.
கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவணங்குவோம். மேலும் நமது தேசத்திற்காக உன்னதமான தியாகம் செய்ய எப்போதும் தயாராக இருக்கும் நமது படைகள் மற்றும் வீரர்களுக்கு வணக்கம்.
முன்மாதிரியான துணிச்சலை வெளிப்படுத்திய நமது வீரர்கள், கரடுமுரடான நிலப்பரப்பையும், மிகவும் மோசமான காலநிலையையும் கடந்து எதிரிகளைத் தோற்கடித்தனர். அவர்களின் வீரத்தின் கதை ஒவ்வொரு நாளும் தேச சேவையில் ஈடுபட நமக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்து வருகிறது.
மாண்புமிகு உறுப்பினர்களே, கார்கில் வெற்றி தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில் நமது துணிச்சலான வீரர்களின் உன்னதமான தியாகத்தை நினைவு கூர்வோம். பாரதத்தை எப்போதும் முதன்மையாக வைத்திருக்க நம்மை மீண்டும் அர்ப்பணிக்க இது ஒரு சந்தர்ப்பம்.
இந்த மாமன்றத்தின் சார்பிலும், என் சார்பிலும் நமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், நமது வீரர்களுக்கு ஒளிமயமான அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன். நமது துணிச்சலான வீரர்களின் நினைவாக மரியாதை செலுத்தும் விதமாக உறுப்பினர்கள் தங்கள் இடங்களில் எழுந்து மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
-----
ANU/PKV/KPG
(रिलीज़ आईडी: 1942750)
आगंतुक पटल : 215