குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

இந்திய வனப்பணி மற்றும் இந்திய பாதுகாப்பு எஸ்டேட் பணி அதிகாரிகள்/ பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

Posted On: 24 JUL 2023 12:49PM by PIB Chennai

இந்திய வனப் பணி அதிகாரிகள் (2022 பேட்ச்) மற்றும் இந்திய பாதுகாப்பு  எஸ்டேட்ஸ் பணி அதிகாரிகள்/ பயிற்சி அதிகாரிகள் (2018 மற்றும் 2022 பேட்ச்) இன்று (ஜூலை 24, 2023)   குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.

அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், உலக அளவில் இந்தியா தலைமைத்துவம் பெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், குடிமைப் பணி அதிகாரிகளாக  அவர்களின் பயணம் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவித்தார். இந்தியா அதன் கலாச்சார செழிப்பு மற்றும் அதன் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்காக உலகளாவிய கவனத்தை ஈர்க்கிறது. தொழில்நுட்பமும், பாரம்பரியமும் கைகோர்த்துச் செல்ல முடியும் என்பதை இந்தியா உலகுக்குக் காட்டியுள்ளது என்று அவர் கூறினார்.

இந்திய பாதுகாப்பு எஸ்டேட் பணி அதிகாரிள்  வழங்கும் சேவைகள் மற்றும் வசதிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் நிலையானதாகவும் இருப்பதை உறுதி செய்வது அவர்களது கடமையாகும் என்று குடியரசுத் தலைவர்  கூறினார். நல்ல நிர்வாகத்திற்கு தொழில்நுட்பம் ஒரு சிறந்த பயனளிக்கிறது  என்றும், எனவே, தங்களது தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். கன்டோன்மென்ட்களை திறம்பட நிர்வகிப்பதற்கும், பாதுகாப்பு நிலங்களை நிர்வகிப்பதற்கும் தொழில்நுட்பத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்திய வனப் பணி அதிகாரிகள் இடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், இந்தியாவின் பருவநிலை மற்றும் நிலப்பரப்பு அதன் வனப் பரவலுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது என்றார். காடுகள் மற்றும் அதில் வசிக்கும் வனவிலங்குகள் நம் நாட்டின் விலைமதிப்பற்ற வளங்கள் என்று கூறிய அவர், சுற்றுச்சூழல் சீர்கேடு, காடுகளின் பரப்பு குறைதல், புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் அச்சுறுத்தல்கள் உலகளாவிய உரையாடல் மற்றும் கூட்டாண்மைகளில் மைய கட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். அதனால்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு 21 ஆம் நூற்றாண்டின் முக்கிய கவலையாக மாறியுள்ளது. "Life - Lifestyle for Environment" என்ற மந்திரத்தை இந்தியா உலகிற்கு வழங்கியுள்ளது. காடுகள் தீர்வின் ஒருங்கிணைந்த பகுதியாகும். தீர்வு வழங்குபவர்களில் இந்திய வனப் பணி அதிகாரிகளும் உள்ளனர். இந்த மந்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்கள் அயராத முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

***

AP/PKV/KPG

 

(Release ID: 1942070) Visitor Counter : 153