தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

அமைப்புசாரா தொழிலாளர்களின் உலகின் மிகப்பெரிய தரவுத்தளமான இ-ஷ்ரம் மற்றும் தேசிய தொழில் சேவை இணையப்பக்கம் குறித்து 4 வது ஜி 20 ஈ.டபிள்யூ.ஜி கூட்டத்தில் இந்தியா விளக்கக்காட்சி அளித்தது

Posted On: 19 JUL 2023 5:18PM by PIB Chennai

இந்தியாவின் ஜி 20 தலைமையின் கீழ் 4 வது வேலைவாய்ப்பு பணிக்குழு கூட்டம் இன்று இந்தூரில் தொடங்குகியது

இந்தியாவின் ஜி20 தலைமையின் கீழ் 4வதுவேலைவாய்ப்பு பணிக்குழு (ஈ.டபிள்யூ.ஜி) கூட்டம் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் இன்று தொடங்கியது.  கூட்டத்தின் தொடக்க அமர்வில்தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளரும் ஜி20 ஈ.டபிள்யூ.ஜி தலைவருமான திருமதி ஆர்த்தி அஹுஜா பிரதிநிதிகளை வரவேற்றுகடந்த மூன்று ஈ.டபிள்யூ.ஜி கூட்டங்களில் செய்யப்பட்ட விவாதங்கள் மற்றும் சாதனைகளை எடுத்துரைத்தார். எதிர்வரும் அமர்வுகளுக்கான  அமைச்சர்கள் நிலையிலான வரைவுப் பிரகடனம் மற்றும் பயன் ஆவணங்கள்  குறித்த பணிகளை இந்த அமர்வில் முடிக்க அவர் வாழ்த்து தெரிவித்தார். 

 

இணைத் தலைமை நாடுகளான இந்தோனேசியாபிரேசில் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் தொடக்க அமர்வில் அறிக்கைகளை வெளியிட்டனர். பயனுள்ள கலந்துரையாடல்கள் மூலம் வேலையில் போட்டியிடுவது குறித்த தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தினர். 

 அமைப்புசாரா தொழிலாளர்களின் உலகின் மிகப்பெரிய தரவுத்தளமான இ-ஷ்ரம் மற்றும் தேசிய தொழில் சேவை (என்.சி.எஸ்) இணையப்பக்கத்தில்  இந்தியா ஒரு விளக்கக்காட்சியை வழங்கியது. இ-ஷ்ரம் மற்றும் என்.சி.எஸ் இணையப்பக்கங்கள் குறித்த விளக்கக்காட்சிஇந்தத் துறைகளில் இந்தியாவின் சாதனை குறித்த ஆர்வத்தையும் விருப்பத்தையும்  வெளிப்படுத்திய சர்வதேச பிரதிநிதிகளுடனும் பகிர்ந்து கொள்ளப்படும்.

 

கூட்டத்தின் இதர அமர்வுகளில்அமைச்சர்கள் நிலையிலான வரைவுப்   பிரகடனம் மற்றும் பயன் ஆவணங்களை இறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட விவாதங்கள் நடைபெற்றன.

முன்னதாகபிரதிநிதிகளுக்கு காலை யோகா வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இது தவிரகூட்டத்தின்போது சிறிய யோகா பயிற்சிக்கும்  ஏற்பாடு செய்யப்பட்டது.  பிரதிநிதிகள் வரலாற்று சிறப்புமிக்க மாண்டு கோட்டை நகரத்திற்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

***

AD/SMB/KRS

 


(Release ID: 1940827) Visitor Counter : 167