பிரதமர் அலுவலகம்
உத்ராகண்ட் மாநிலம் சமோலியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
19 JUL 2023 4:41PM by PIB Chennai
உத்ராகண்ட் மாநிலம் சமோலியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறியுள்ள பிரதமர், மாநில அரசின் கீழ், உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து நிவாரணங்களையும் அளித்து வருவதாகக் கூறியுள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
“மிகவும் வருத்தம் அளிக்கிறது! உத்ராகண்ட் மாநிலம் சாமோலியில் நிகழ்ந்த விபத்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளாட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளிலும் ஈடுபட்டுள்ளது: பிரதமர்@narendramodi
***
LK/IR/KPG/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 1940779)
வருகையாளர் எண்ணிக்கை : 208
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam