கூட்டுறவு அமைச்சகம்

சிஆர்சிஎஸ் – சஹாரா ரீஃபண்ட் இணையதளத்தில் கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்கள் உரிமைக் கோரல்களைத் தாக்கல் செய்வது குறித்த வசதிகள் தொடர்பான முக்கிய முடிவு குறித்து மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஆய்வு செய்தார்

Posted On: 19 JUL 2023 3:32PM by PIB Chennai

சிஆர்சிஎஸ் – சஹாரா ரீஃபண்ட் இணையதளத்தில் கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்கள் உரிமைக் கோரல்களைத் தாக்கல் செய்வது குறித்த வசதிகள் தொடர்பான  முக்கிய முடிவு குறித்து மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஆய்வு செய்தார். சஹாரா குழுமத்தின் கூட்டுறவு சங்கத்தின் உண்மையான டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்கும் நடைமுறையில், அவர்களுடைய உரிமைக் கோரல்களுக்கான சிஆர்சிஎஸ் – சஹாரா ரீஃபண்ட் இணையதளத்தில் தாக்கல் செய்வது குறித்து பொதுச் சேவை மையங்கள் உதவும்.  கூட்டுறவு சங்க மத்திய பதிவாளர் (சிஆர்சிஎஸ்) – சஹாரா ரீஃபண்ட் இணையதளமான https://mocrefund.crcs.gov.in –ஐ புதுதில்லியில் 2023 ஜூலை 18 அன்று திரு அமித் ஷா தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் 5.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுச் சேவை மையங்கள் தேவையான இணையதள வசதி, கணினி, பிரிண்டர், ஸ்கேனர் வசதிகளுடன் 300-க்கும் மேற்பட்ட இ சேவைகளை அளிக்கிறது. உண்மையான டெபாசிட்தாரர்கள் சிஆர்சிஎஸ் – சஹாரா ரீஃபண்ட் இணையதளத்தில் தங்களது உரிமைக் குரல் குறித்த தாக்கல்களுக்கு அருகில் உள்ள பொதுச் சேவை மையங்களின் உதவியை அணுகலாம்.

***

LK/IR/KPG/RJ



(Release ID: 1940731) Visitor Counter : 97