நிலக்கரி அமைச்சகம்

அனல்மின் நிலையங்களுக்கு போதுமான நிலக்கரி கிடைக்க ஏற்பாடு

அனல்மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு 28% அதிகரித்து 33.46 மில்லியன் டன்னாக உள்ளது

இந்திய ரயில்வே தேவையான அளவு நிலக்கரி ஏற்றிச்செல்லும் வேகன்களை வழங்க தயார் நிலையில் உள்ளது.

Posted On: 18 JUL 2023 3:48PM by PIB Chennai

அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளதாக நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி நிலவரப்படி அனல்மின் நிலையங்களில் 33.46 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இந்த அளவு 28% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நிலக்கரி அமைச்சகம் மத்திய மற்றும் மாநில அனல்மின் நிலையங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் நிலக்கரி பற்றாக்குறை என்பது அறவே இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் அனல்மின் நிலைய உற்பத்தி மிக அதிக அளவில் இருந்தது என்றும் மழை காரணமாக நிலக்கரி உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படும் நிலை இருந்ததாகவும் ஒவ்வொரு சுரங்கம் குறித்தும் முன்கூட்டியே தகவல் சேகரிக்கப்பட்டு திட்டமிடப்பட்டதால் பருவமழை காலத்திலும் உற்பத்தி பாதிக்கப்படாமல் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிலக்கரி உற்பத்தி மையங்கள் போக்குவரத்துக்காக சிமெண்டு சாலைகளை அமைத்து இருப்பதால் தங்கு தடையின்றி போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் உற்பத்தி பாதிக்கப்படாமல் கவனம் எடுத்துக்கொண்ட நிலையில் ரயில்வே துறையும் போதுமான வேகன்களை தயார் நிலையில்  வைத்திருந்ததன் காரணமாக அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரியை எடுத்துச்செல்வதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

-----

(Release No: 1940460)

SM/VS/KRS 

 
 
 
 


(Release ID: 1940578) Visitor Counter : 111