பிரதமர் அலுவலகம்
கேரள முன்னாள் முதல்வர் திரு உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
18 JUL 2023 10:09AM by PIB Chennai
கேரள முன்னாள் முதல்வர் திரு உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் மற்றும் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
தாம் குஜராத் முதல்வராக இருந்த போது கேரள முதல்வராக பதவி வகித்த உம்மன் சாண்டியுடன் பல நேரங்களில் உரையாடியது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நினைவுகூர்ந்துள்ளார்
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
பொது வாழ்க்கைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து கேரள முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபட்ட எளிமையான தலைவரை நாம் இழந்துவிட்டோம். தாம் குஜராத் முதல்வராக இருந்த போதும், பின்னர் பிரதமராக பதவி வகித்த போதும், கேரள முதல்வராக பதவி வகித்த உம்மன் சாண்டியுடன் பல நேரங்களில் உரையாடியது குறித்து நான் நினைவுகூர்கிறேன். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினரின் துயரத்தில் நான் பங்குகொள்வதோடு, எனது எண்ணங்கள் அவர்களுடன் உள்ளது. அவரது சாந்தியடையட்டும்.
***
SM/AP/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1940417)
வருகையாளர் எண்ணிக்கை : 173
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada