நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரம்பரிய மற்றும் அழிந்து வரும் தாவரங்களை நட்டுவைத்து ஆரவல்லி சூழலியலை பாதுகாக்கும் முன்முயற்சி தொடக்கம்

Posted On: 17 JUL 2023 8:48AM by PIB Chennai

பசுமை திருவிழாவை முன்னிட்டு புதுதில்லியின் ஆரவல்லி உயிரி பூங்காவில் ஆரவல்லி சூழலியலை பாதுகாக்கும் முயற்சியாக சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வு இயக்குநரகத்தின் அதிகாரிகள் பாரம்பரிய மற்றும் அழிந்து வரும் தாவரங்களை நட்டு வைத்தனர்.

சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வு முதன்மை தலைமை இயக்குநர் திரு சுர்ஜித் புஜபால், தலைமை இயக்குநர் திரு சமன்ஜாஸ் தாஸ், முதன்மை கூடுதல் தலைமை இயக்குநர்கள் திரு ராஜேஷ் ஜிந்தால், திரு பி.பி. குப்தா மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுத்து, இயற்கை வளங்களை மேம்படுத்தும் வகையில் ஆரவல்லி சூழலியலுக்கு ஏற்ற  பாரம்பரிய மற்றும் அழிந்து வரும் தாவர இனங்களைச் சேர்ந்த 200 செடிகள் நடப்பட்டன. வாழ்விடத்தின் பல்லுயிரிகளைப் பாதுகாப்பது, முக்கிய தாவர இனங்களையும் மற்றும் இதர அழிந்து வரும் தாவர வகைகளையும், விலங்கு இனங்களையும் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த கல்வி அறிவை பரப்புவது முதலியவை இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

                                                                                                                                          ----

 

AP/BR/KPG

 



(Release ID: 1940184) Visitor Counter : 158