பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம்: பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டு அறிக்கை

Posted On: 15 JUL 2023 6:16PM by PIB Chennai

பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா சபையின் கட்டமைப்பு மாநாட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பிரகடனங்கள் மற்றும் அடிப்படை கோட்பாடுகளை மதித்து உலகளாவிய கூட்டு செயற்பாட்டின் வாயிலாக பருவநிலை மாற்ற சவாலை எதிர்கொள்வதன் அவசியத்தை இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடியும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் மேதகு திரு ஷேக் முகமது பின் சயத் அல் நஹ்யானும் வலியுறுத்தி இருக்கிறார்கள். பருவநிலை மாற்றம் சம்பந்தமான லட்சியம், கார்பன் வெளியிட்டைக் குறைப்பது மற்றும் தூய்மையான எரிசக்தி போன்றவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உறுதிபாட்டை தலைவர்கள் முன்வைத்தனர்.

 

2023இல் காப்28 மாநாட்டை நடத்துவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து தமது முழு ஆதரவையும் அளிப்பதாக கூறினார். ஜி20 தலைமைத்துவத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அதிபர் இந்தியாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட ஒற்றுமை மற்றும் ஆதரவை வெளிப்படுத்துவதன் மூலமும், பங்களிப்புகள் வாயிலாகவும் பாரிஸ் ஒப்பந்தத்தின் நீண்ட கால இலக்குகளை பாதுகாப்பதற்கான முயற்சிகளை விரைவுப்படுத்துமாறு இரு தலைவர்களும் சர்வதேச சமூகத்தை வலியுறுத்தினார்கள். பாரிஸ் ஒப்பந்தத்தின் விதிகளுக்கு இணங்க பருவநிலை மாற்றத்தின் மிகவும் மோசமான தாக்கங்களை திறம்பட எதிர்கொள்வதற்கு அதிக பாதிப்புக்குள்ளாகக் கூடிய சமூகங்களுக்கு ஆதரவளிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பின் அவசியத்தை அவர்கள் எடுத்துரைத்தனர். இது சம்பந்தமாக இழப்பு மற்றும் சேதம் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், காப் 28இன் இழப்பு மற்றும் சேத நிதி மற்றும் நிதி வசதிகளை செயல்படுத்த நாடுகளை வலியுறுத்துவதன் மூலம் பருவ நிலையின் மோசமான விளைவுகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

***

AP/RB/DL



(Release ID: 1939924) Visitor Counter : 129