சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
ஆந்திரப்பிரதேசம் திருப்பதியில் நாடு தழுவிய மரக்கன்று நடும் இயக்கத்தை திரு நிதின் கட்கரி தொடங்கிவைத்தார்
Posted On:
12 JUL 2023 7:04PM by PIB Chennai
ஆந்திரப்பிரதேசம் திருப்பதியில் நாடு தழுவிய மரக்கன்று நடும் இயக்கத்தை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று தொடங்கிவைத்தார்.
விடுதலை அமிர்தப்பெருவிழாவின் ஒரு பகுதியாக, அமிர்த நீர்நிலைகள், சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நாளில் 2.75 லட்சம் மரக்கன்றுகளை நடும் இயக்கத்திற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. நீடித்த சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான இந்த இயக்கத்தில் மாணவர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு நிதின் கட்கரி, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் பசுமை இந்தியா இயக்கத்துடன் இணைந்து இந்த முன்னெடுப்பு மூலம் நமது தேசிய நெடுஞ்சாலைகளை நீடித்த சுற்றுச்சூழல் மிக்க பசுமை நெடுஞ்சாலைகளாக மாற்றுவது நோக்கமாகும் என்று குறிப்பிட்டார்.
SM/IR/RS/KRS
***
(Release ID: 1939064)
Visitor Counter : 158