மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மகாபலிபுரத்தில் நடைபெற்ற தேசிய மீன் விவசாயிகள் தின சந்திப்பு - 2023 நிறைவு
நவீன தொழில்நுட்பங்கள் பயன்பாடு மற்றும் மீன் உற்பத்தியை மேம்படுத்துவதில் மீன் விவசாயிகள், ஸ்டார்ட் அப்கள், புதிய கண்டுபிடிப்பாளர்களின் அர்ப்பணிப்பை இது எடுத்துக்காட்டியது
Posted On:
11 JUL 2023 5:02PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் கீழ் இயங்கும் மத்திய மீன் வளத்துறை மற்றும் பிற பங்குதாரர்கள் இணைந்து தேசிய மீன் விவசாயிகள் நாள் சந்திப்பு 2023', 'ஸ்டார்ட்-அப் மாநாடு' ஆகியவற்றை மகாபலிபுரத்தில் கொண்டாடின. இந்த நிகழ்வு தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரான மகாபலிபுரத்தில் ஜூலை 10 அன்று தொடங்கி ஜூலை 11 அன்று நிறைவடைந்தது. இது நவீன தொழில்நுட்பங்கள் பயன்பாடு மற்றும் மீன் உற்பத்தியை மேம்படுத்துவதில் மீன் விவசாயிகள், ஸ்டார்ட் அப்கள், புதிய கண்டுபிடிப்பாளர்களின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டியது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில் நடைபெற்றது. மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர். எல் முருகன் முன்னிலை வகித்தார். பிரதமரின் மீன்வள மேம்பாடு திட்டம் மீன்வளம் மற்றும் மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, கிசான் கடன் அட்டை போன்ற அரசுத் திட்டங்களைப் பயன்படுத்துதல், மீனவர்கள், மீன் விவசாயிகள் மற்றும் தொடர்புடைய பங்குதாரர்களுக்கு நிலையான எதிர்காலத்திற்குரிய தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்களுடன் இவர்கள் கலந்துரையாடினர். மீன்வளத் துறையின் அனைத்துப் பங்குதாரர்களின் பங்கேற்புடன் இந்தநிகழ்வு பெரும் வெற்றியைப் பெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா, இத்தகைய ஆலோசனை தொடர்ந்து நடைபெறும் என்றும், அது நல்ல பலனைத் தரும் என்று நம்புவதாகவும் கூறினார். இது நமது இணைந்த பயணத்தின் போக்கை வடிவமைக்கும் என்றும், உறுதியான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்த மத்திய அமைச்சர், மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகளுக்கு உதவும் யோசனைகள் செழிக்க, ஒத்துழைப்புகள் மலர, புதுமை செழித்துவளரும் சூழலை உருவாக்குவதில் அனைவரும் கருவியாக மாற வேண்டுகோள் விடுத்தார்.
இந்த சந்திப்பில் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதற்கு, மத்திய மீன்வளத் துறையின் இணைச் செயலாளர் திரு. சாகர் மெஹ்ரா நன்றி தெரிவித்தார். உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவது, தரத்தை மேம்படுத்துவது, உள்நாட்டு மீன் நுகர்வு, வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பது, கழிவுகளைக் குறைப்பது, வேலைவாய்ப்பில்லா இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவது போன்றவற்றை மீன்வளத்துறை குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
மீன்வளத் துறையில் சமீபத்திய கண்டுபிடிப்புகளை இணைத்துக்கொள்வதை இந்த நிகழ்ச்சி வலியுறுத்தியது. அதே வேளையில், தொழில் முனைவோர் வளர்ச்சி, வணிக மாதிரிகளை மேம்படுத்துதல், எளிதாக தொழில் செய்வதை மேம்படுத்துதல், புதிய கண்டுபிடிப்புகள், ஸ்டார்ட்-அப்கள், இன்குபேட்டர்கள் போன்ற முன்முயற்சிகளுக்கு சாதகமான சூழலையும் மீன்வளத்துறை உருவாக்கும் என்றும் இந்த சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1938713
***
(Release ID: 1938777)
Visitor Counter : 171