சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025, ஜனவரி 1  முதல் தயாரிக்கப்படும்  என்2 மற்றும் என்3 வகைகளைச் சேர்ந்தமோட்டார் வாகனங்களின் கேபின்களில் குளிரூட்டல் அமைப்பைக் கட்டாயமாக்குவதற்கானவரைவு அறிவிக்கை  வெளியிடப்பட்டுள்ளது

Posted On: 11 JUL 2023 4:42PM by PIB Chennai

2025, ஜனவரி 1  முதல் தயாரிக்கப்படும்  என்2  மற்றும் என்3 வகைகளைச் சேர்ந்த மோட்டார் வாகனங்களின் கேபின்களில் குளிரூட்டல் அமைப்பைக் கட்டாயமாக்குவதற்கான வரைவு அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்  2023 ஜூலை 10 அன்று   வெளியிட்டுள்ளது.

குளிர்சாதன அமைப்புப் பொருத்தப்பட்ட கேபினின் செயல்திறன் சோதனை ஐஎஸ் 14618: 2022-ன் படியும், அவ்வப்போது திருத்தப்படும் நிலையின்படியும் இருக்க வேண்டும். அறிவிக்கை  வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் பங்கேற்பாளர்களிடமிருந்து கருத்துகள் / ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. இவற்றை comments-morth[at]gov[dot]in  என்ற இணையதளத்தில்  அனுப்பலாம்.

Click here to see the gazette notification

********


(Release ID: 1938758) Visitor Counter : 154