அணுசக்தி அமைச்சகம்
ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற்ற 34-வது சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியின் பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம்
Posted On:
11 JUL 2023 1:50PM by PIB Chennai
ஐக்கிய அரபு எமிரேட், அல் அய்னில் 2023 ஜூலை 3 முதல் 11 வரை காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற 34-வது சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியில் அனைத்து மாணவர்களும் தங்கப்பதக்கம் வென்று பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தது. சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா முதல்முறையாக, பங்கேற்ற அனைத்துப் பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்று பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த துருவ் அத்வானி, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த இஷான் பெட்நேக்கர், மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னாவைச் சேர்ந்த மேக் சப்தா, சத்தீஷ்கர் மாநிலம் ரிசாலியைச் சேர்ந்த ரோகித் பாண்டா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
நடப்பாண்டு நடைபெற்ற சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியில் 76 நாடுகளைச் சேர்ந்த 293 மாணவர்கள் பங்கேற்றனர். நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற மற்றொரு நாடு சிங்கப்பூர் ஆகும். மொத்த 29 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக, கடந்த 2008, 2009, 2010, 2011, 2015, 2021 ஆகிய ஆண்டுகளில் வானியல் மற்றும் வான்இயற்பியல் பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்திருந்தது.
2018ம் ஆண்டில் இயற்பியலிலும், 2014, 2019, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் ஜூனியர் அறிவியலிலும் இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1938646
***
AD/IR/RS/GK
(Release ID: 1938742)
Visitor Counter : 165