கலாசாரத்துறை அமைச்சகம்

கர்நாடக மாநிலம் ஹம்பியில் 3-வது ஜி-20 கலாச்சார பணிக்குழு கூட்டம் இன்று தொடங்கியது

Posted On: 09 JUL 2023 7:20PM by PIB Chennai

கர்நாடக மாநிலம் ஹம்பியில் 3-வது ஜி-20 கலாச்சார குழு மாநாடு இன்று (09-07-2023) தொடங்கியது. இது தொடர்பாக ஹம்பியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு கோவிந்த் மோகன், இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின் கீழ் 3 வது கலாச்சார பணிக்குழு கூட்டம் ஜூலை 9 முதல் 12 வரை கர்நாடகாவின் ஹம்பியில் நடைபெறுவதாகக் கூறினார்.

 

இந்த கூட்டத்தில் ஜி 20 உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகள் மற்றும் பல சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வதாகவும் அவர் கூறினார். கஜுராஹோ மற்றும் புவனேஸ்வரில் முதல் இரண்டு கூட்டங்கள் நடைபெற்றதாக அவர் தெரிவித்தார்.

 

ஹம்பியில் நடைபெறும் மூன்றாவது கூட்டத்தில் ஜி 20 உறுப்பு நாடுகள், அழைப்பாளர் நாடுகள் மற்றும் ஏழு பலதரப்பு அமைப்புகளிலிருந்து சுமார் 50 பேர் பங்கேற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நான்கு உலகளாவிய கருப்பொருள்களில் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

கலாச்சார சொத்துக்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு; நிலையான எதிர்காலத்திற்காக வாழும் பாரம்பரியத்தைப் பயன்படுத்துதல்; ஆக்கபூர்வமான கலாச்சாரப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல்; மற்றும் கலாச்சார பாதுகாப்பிற்காக டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை இக்கூட்டத்தின் 4 முன்னுரிமை அம்சங்களாகும்.

 

வாரணாசியில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கலாச்சார அமைச்சர்கள் கூட்டம் தொடர்பான கூட்டறிக்கையை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக திரு கோவிந்த் மோகன் கூறினார்.

***

AD/PLM/KRS

 



(Release ID: 1938329) Visitor Counter : 148