எஃகுத்துறை அமைச்சகம்

இந்திய உருக்கு உற்பத்தி நிறுவனம் அதன் உற்பத்தி மற்றும் விற்பனையின் சிறந்த முதல் காலாண்டை பதிவு செய்தது

Posted On: 05 JUL 2023 9:10AM by PIB Chennai

இந்திய உருக்கு உற்பத்தி நிறுவனம் (செயில்) 2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் (24-ம் நிதியாண்டின் முதல் காலாண்டு) உற்பத்தி மற்றும் விற்பனையில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது.

திரவ இரும்பு, கச்சா எஃகு மற்றும் விற்க கூடிய எஃகு உற்பத்தி 5.037 மில்லியன் டன் (எம்டி), 4.667 மில்லியன் டன், மற்றும் 4.405 மில்லியன் டன் ஆகியவை முறையே சிறந்த முதல் காலாண்டு முடிவுகளைக் குறிக்கிறது. இந்த புள்ளிவிவரங்கள் இதற்கு முந்தைய சிறந்தவற்றுடன் ஒப்பிடும்போது முறையே 7%, 8% மற்றும் 8 சதவீதம் என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிக்கின்றன  .

செயில் நிறுவனம் முதல் காலாண்டில் 3.9 மெட்ரிக் டன் விற்பனை அளவை எட்டியிருப்பதன் மூலம் அதன் மிக உயர்ந்த விற்பனை இலக்கை எட்டியுள்ளது. இதன் மூலம் கடந்தாண்டு இதே கால கட்டத்தில் இருந்ததை விட 24 சதவீதம் கூடுதல் வளர்ச்சி அடைந்ததைக் குறிக்கிறது. திறன் பயன்பாட்டை அதிகரிப்பதிலும், வாடிக்கையாளரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் செயில் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் நிலையில், செயில் நிறுவனம் இந்த சாதனையைப் படைத்துள்ளது.

-----

(Release ID: 1937403)

AD/AM/KRS

 
 
 


(Release ID: 1937627) Visitor Counter : 152